Published : 15 Jun 2017 09:02 AM
Last Updated : 15 Jun 2017 09:02 AM

ஆவின் பாலில் தண்ணீர் கலந்த வழக்கு: விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை

ஆவின் பாலில் தண்ணீர் கலந்தது தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத் தில் நடைபெற்று வரும் வழக்கை விசாரிக்க 2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு திருவண் ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட பாலைத் திருடி, அதற்கு பதிலாக தண்ணீரை கலப்படம் செய்ததாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீஸார், பால் கொண்டு செல் லும் லாரி போக்குவரத்து நிறுவனம் நடத்திய வைத்தியநாதன் உள் ளிட்ட 23 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். வைத்தியநாத னையும் கைது செய்தனர். விழுப் புரம் மாவட்ட தலைமை குற்றவி யல் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள் ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்தியநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘எனக்கு எதிராக சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்துள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளன. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘‘ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததாக தொடரப் பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட வாகனங்களை வைத்தியநாதன் தான் இயக்கியுள்ளார். எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என வாதிட்டு கடும் ஆட்சேபம் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘வைத்தியநாத னுக்கு எதிராக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு 2 வாரங்களுக்கு மட்டும் இடைக் காலத் தடை விதித்து உத்தர விட்டார். மனு மீதான விசாரணையையும் தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x