Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM

இனி ஒருபோதும் தோற்க மாட்டேன்: வைகோ

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் பேசிய வைகோ, ‘இனி ஒருபோதும் தோற்க மாட்டேன். இனி நமக்கு அனைத்திலும் வெற்றி தான்’ என்று கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் அறிவித்தார். இந் நிலையில், தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப் பதற்காக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தைக் சனிக்கிழமை சென்னையில் கூட்டி னார் வைகோ. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக குழு ஒன்று அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மதிமுக பொருளாளர் மாசிலா மணி, ஆட்சி மன்றக் குழு செயலாளர் அ.கணேசமூர்த்தி எம்.பி., உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் ஆகியோரைக் கொண்ட குழு முதலில் அறிவிக்கப்பட்டது. சற்று நேரத்தில் இந்தக் குழுவில் டாக்டர் சதன் திருமலைக்குமாரும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி வழக்கு ஒன்றில் சனிக்கிழமை மதியம்தான் திருமலைக்குமாருக்கு முன்ஜாமீன் கிடைத்ததாம். சிக்கல் தீர்ந்த பிறகே அவரும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவில் சேர்க்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இன்றைய கூட்டத்தில் வழக்கத்தைவிட உற்சாகமாக இருந்தார் வைகோ என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.

கூட்டத்தில் வைகோ பேசியதாக கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வாஜ் பாய் காலத்திலிருந்தே நாம் பா.ஜ.க.வுடன் அனுசரணையாக இருந்து வருகிறோம். இப்போது நாம் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோம். வேறு யாரெல்லாம் இந்தக் கூட்டணிக்கு வரப் போகி றார்கள் என்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

இனி எல்லாம் வெற்றிதான்

தேர்தல் வந்துவிட்டாலே நான் தூங்க மாட்டேன். சொந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு உழைத் ததை விட, கூட்டணிக் கட்சி வேட் பாளர்களுக்குத்தான் கடந்த காலங் களில் அதிகம் உழைத்திருக் கின்றேன். இந்தத் தேர்தலிலும் கூட்டணி வெற்றிக்காக ஊன், உறக்கம் மறந்து உழைக்கப் புறப் பட்டு விட்டேன். இனி ஒருமுறை நான் தோற்க மாட்டேன். இனி நமக்கு தோல்வி என்பதே இல்லை; அனைத்திலும் வெற்றிதான் என்று பேசி மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளை வைகோ உற்சாகப்படுத்தினார்.

மற்றபடி, மதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. ஐவர் குழு பொங்கல் கழித்து பேச்சுவார்த்தை நடத்தும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x