Published : 22 Jul 2016 07:57 AM
Last Updated : 22 Jul 2016 07:57 AM

ஈரோடு புத்தக திருவிழாவையொட்டி மாநில பேச்சுப் போட்டி: 24-ம் தேதி நடக்கிறது

ஈரோடு புத்தகத் திருவிழாவை யொட்டி கல்லூரி மாணவ, மாண விகளுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி வரும் 24-ம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டா லின் குணசேகரன் வெளியிட்ட அறிக்கை:

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் 12-ம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 12 நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி. பூங்காவில் நடைபெறவுள்ளது. ஈரோடு புத்தகத் திருவிழாவை யொட்டி கல்லூரி மாணவர்க ளுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி வரும் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு யுஆர்சி பள்ளி அரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, மேலாண்மை கல்லூரி, சட்டக்கல் லூரி, செவிலியர் கல்லூரி, மருந் தியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

முதல் சுற்றுக்கான தலைப்பு “பொறுப்புகளை ஏற்று பொதுப் ப ணி ஆற்று” என்பதாகும். இறுதிச்சுற்றுக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அறிவிக்கப்படும். இதற்கான முதல் பரிசு ரூ.10,000. 2-வது பரிசு ரூ.5,000. மூன்றாவது பரிசு ரூ.3,000. இத்துடன் சான்றிதழ் மற்றும் நூல்கள் பரிசுகளாக வழங்கப்படுவதோடு, ஈரோடு புத்தகத் திருவிழா மேடையில் பேசும் வாய்ப்பும் அளிக்கப்படும்.

ஒவ்வொரு கல்லூரியும் அதி கபட்சம் மூன்று மாணவர்களை தேர்வு செய்து அனுப்பலாம். கல்லூரி முதல்வரின் கடிதத்தை உடனடியாக ‘மக்கள் சிந்தனைப் பேரவை, ஏ-38 சம்பத் நகர், ஈரோடு-638011’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தொலைபேசி எண்கள் 0424-2269186, 88835 25553, மின்னஞ்சல்: info@ makkalsinthanaiperavai.org ஆகிய வற்றிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x