Last Updated : 02 Jun, 2017 08:45 AM

 

Published : 02 Jun 2017 08:45 AM
Last Updated : 02 Jun 2017 08:45 AM

புதுச்சேரியில் மருத்துவ முதுநிலை படிப்புக்கான சேர்க்கை விவகாரம்: ஆளுநர் கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கையால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின

மாணவர், பெற்றோர் வரவேற்பு



மருத்துவ முதுநிலை படிப்பு சேர்க் கையில் புதுச்சேரி தனியார் மருத் துவக் கல்லூரிகள் மீது ஆளுநர் கிரண்பேடி எடுத்த நடவடிக்கையால் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப் பட்டு வருகின்றன. ஆளுநரின் நடவடிக்கையை மாணவர்கள், பெற்றோர் வரவேற்றுள்ளனர்.

புதுச்சேரியில் இளநிலை மருத் துவ படிப்புகள் மற்றும் பொறியி யல் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் சென்டாக் மூலம் கலந்தாய்வு நடை பெறுகிறது. இதற்கிடையில், 'தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப் பில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும்; அந்த இடங்களை நீட் ரேங்க் அடிப்படையில் நிரப்ப வேண்டும்' என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி அரசு ஒதுக்கீடாக புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு கல்லூரிக்கு 3 இடங் களும், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு 159 இடங்களும் முதுநிலைப் படிப்புகளுக்காக பெறப்பட்டன.

இந்த கலந்தாய்வில் பங்கேற்க 267 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப் படாததால் 100-க்கும் குறைவான மாணவர்களே பங்கேற்றனர். பலர் கலந்தாய்வை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர். கல்விக் கட்டணத்தை முறையாக அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையடுத்து புதுச்சேரி சுய நிதி மருத்துவ கல்லூரிகளுக்கு தற் காலிகமாக கல்விக் கட்டணத்தை உயர்கல்வி கட்டணக் குழுத் தலை வர் ராஜேஸ்வரன் நிர்ணயம் செய் தார். அதன்படி கிளினிக்கல் சார்ந்த மருத்துவ பட்டமேற்படிப்புக்கு ரூ. 3 லட்சமும், கிளினிக்கல் சாராத மருத்துவ பட்டமேற்படிப்புக்கு ரூ. 2.5 லட்சமும் கல்விக் கட்டணமாக கல்லூரிகள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் ஏற்க மறுத்தன.

ஆளுநரிடம் முறையீடு

தனியார் கல்லூரிகள் நிர்ணயிக் கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் தொகை வசூலிக்கின்றன என மாணவர்கள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் அளித்தனர். உடனே ஆளுநர் டெல்லியில் உள்ள யுஜிசியின் செயலாளர் பேராசிரியர் ஜஸ்பால் சிங் சாந்துவுடன் தொலைபேசி மூலம் பேசினார்.

அடுத்த 48 மணி நேரத்தில் இ-மெயில் மூலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கல்விக் கட்டணம் தொடர்பான உத்தரவை யுஜிசி அனுப்பி உள்ளது. அதில், அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை மீறி செயல்படும் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது தேவையான நடவடிக்கையை யுஜிசி மேற்கொள்ளும் என்று எச்சரித்திருந்தது.

இதைத் தொடர்ந்து 2-ம் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 18, 19 ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. இதில் 15 இடங்கள் மட் டுமே நிரம்பின. இதனால் அரசு ஒதுக்கீட்டில் 71 இடங்கள் காலி யாகவே இருந்தன. இந்நிலையில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் குறைவாக இருப்பதாகக் கூறி, தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றது. இதை யடுத்து, கிளினிக்கல் படிப்புக்கு ரூ.5.50 லட்சமும், கிளினிக்கல் சாராத படிப்புக்கு ரூ.3.5 லட்சமும் கல்விக் கட்டணமாக உயர்த்தப்பட்டது. இதையும் புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஏற்கவில்லை.

மாணவர்கள் அதிர்ச்சி

தொடர்ந்து, கடந்த 26-ம் தேதி தனியார் மருத்துவ கல்லூரி நிர் வாகிகளுடனான பேச்சுவார்த்தை சட்டப்பேரவை வளாகத்தில் முதல் வர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கல்வி கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்றுக் கொண்டு மாணவர்களுக்கான இடங்களை உறுதி செய்யுமாறு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தனியார் சுயநிதி மருத் துவக் கல்லூரி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.

ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரியை நடத்துவதற்கு அதிக செலவாகிறது; கல்வி கட்டணத்தை ரூ. 25 லட்சம் வரை நிர்ணயித்தால் ஏற்பதாக திட்டவட்டமாக தெரிவித்து விட்டன. தனியார் கல்லூரிகள் எதிர் பார்க்கும் கட்டணத்தை மாணவர் களால் செலுத்த முடியாது என்பதால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் சென்டாக் நிர்வாகம் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக ஒரு அறிவிப்பை வெளி யிட்டது. அதாவது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் காலியாக இருந்த 71 இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவந்து கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவித்தது.

அதிகாரிகள் திணறல்

இதையடுத்து கடந்த 30-ம் தேதி காலாப்பட்டில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வை ஆளுநர் கிரண்பேடி திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சென் டாக் மூலம் தேர்வு செய்து அனுப் பிய மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு சென்டாக் எடுத்த நடவடிக்கை என்ன? ஏன் சேர்த்துக் கொள்ளப் படவில்லை? சென்டாக் ஏழை மாண வர்கள் பயன்பாட்டுக்கு உள்ளதா? அல்லது வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் குறுக்கு வழியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து படிப் பதற்கு உதவுவதற்காக உள்ளதா என்று பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினார்.

இதற்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். இதையடுத்து அங்கு வந்த சுகா தாரத்துறை செயலர் பாபு, இயக்குநர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மாலைக்குள் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் சென்டாக் தேர்வு செய்த மாணவர்களை கட்டணக் குழு நிர்ணயம் செய்த கட்டணத் தில் தனியார் கல்லூரிகள் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண் டும் எனக் கூறி சென்டாக் அலுவல கத்திலேயே அமர்ந்திருந்தார்.

தொடர்ந்து மாணவர் சேர்க்கை விவரம், கல்வி கட்டண நிர்ணயம், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் அளித்துள்ள கடிதங்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்தார். மாணவர் களுக்கு இடம் அளிக்காத மருத் துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சென்டாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

பிற்பகலில் சென்டாக் ஒருங்கி ணைப்பாளர் டாக்டர் கோவிந்தராஜ், துணை ஒருங்கிணைப்பாளர் பழனி ராஜா ஆகியோரை மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அழைத்த ஆளுநர் கிரண்பேடி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த விவரங்களை தருமாறு கேட்டார். அவர்கள் முதலில் சரியான விவரங்களை தரவில்லை. இதனால் கோபமுற்ற ஆளுநர், கலந்தாய்வுக்கு அரசு இடங்கள் ஒதுக்கப்பட்டதை ரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதாக சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் கலந்தாய்வை நடத்தினர். முதல் இரு பிரிவுகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக நீட் தகுதித் தேர் வில் மதிப்பெண்கள் 7.5 சதவீதம் தளர்வு வழங்கப்பட்டதால் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற ஏராளமானோர் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதில் 26 இடங்கள் நிரம்பின. மீதியுள்ள 45 இடங்கள் மத்திய சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி நேற்று பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சேர்க்கின்றனரா? என திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு ஒதுக்கீட்டு இடத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கண் டிப்பாக சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் கல்லூரி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

2 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

இதற்கிடையே, அரசு நிர்ண யித்த கட்டணத்தை ஏற்க மறுத்து மணக்குள விநாயகர், வெங்கடேஸ் வரா ஆகிய இரு மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களை சேர்த்து கொள்ளவில்லை. இதையடுத்து இரு கல்லூரிகளுக்கும் சுகாதாரத் துறை சார்பு செயலர் ஜீவா விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், அரசு நிர்ண யித்த கல்வி கட்டணத்தை ஏற்க மறுப்பதால் தங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்ய கூடாது? இதுதொடர்பாக 2-ம் தேதிக்குள் (இன்றைக்குள்) விளக் கம் அளிக்க வேண்டும். இல்லை யென்றால் நடவடிக்கை எடுக்கப் படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மாணவர்களும், பெற்றோரும் பாராட்டுகளை தெரி வித்துள்ளனர். ஆளுநரின் நடவடிக் கையால் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தனர் என்ற முழு விவரம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரியவரும் என்று சென்டாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x