Published : 18 Jan 2017 08:56 AM
Last Updated : 18 Jan 2017 08:56 AM

திருக்குறளை மக்கள் அனைவரும் வாழ்வியலாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: தலைமை குற்றவியல் நடுவர் அறிவுரை

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் திருக்குறளை வாழ் வியலாக ஏற்றுக்கொள்ள வேண் டும் என்று திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் இல.சோ.சத்தியமூர்த்தி தெரி வித்தார்.

நாகை மாவட்டம் மயிலாடு துறையில் திருக்குறள் பேரவை யின் சார்பில் திருவள்ளு வர் தினம் கொண்டாடப் பட்டது. பேரவைத் தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடை பெற்ற விழாவில், திருவள்ளு வரின் உருவப் படத்தை ஏந்திய படி விசித்திராயர் வீதியில் இருந்து தியாகி நாராயணசாமி அரசுப் பள்ளி வரை ஊர்வலம் நடைபெற்றது.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பார்வை யற்றோர் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவர் சத்தியமூர்த்தி, ‘குறள் கூறும் சட்டநெறிகள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

திருக்குறள் தனது உள்ளார்ந்த கருத்துகளால் மொழி, நாடு கடந்து போற்றப்படுகிறது. அதை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றவாறு ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளில் புதிதாக மொழிபெயர்க்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றைய சூழலிலும் பொருத்தமானதாகவும், அனைவரும் பின்பற்றக்கூடிய தாகவும் இருக்கும் திருக்குறளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கைப் பனுவலாகவும், வாழ் வியலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

திருக்குறளில் பல்வேறு சட்டங் களுக்கு முன்னோடியானதாக வும், வழிகாட்டக்கூடியதாகவும் பல கருத்துகள் உள்ளன. உதாரணமாக குற்ற மனப் பான்மை இல்லாமல் செய் யக்கூடிய எதுவும் குற்றமாகாது என்ற கருத்தைச் சொல்லலாம். இதுபோல பல சட்ட நெறிமுறைகள் ஆங்காங்கே விரவியிருக்கின்றன.

திருக்குறளை மேன்மேலும் தமிழில் மொழிபெயர்ப்பதையும், உரை எழுதுவதையும்விட பார்வையற்றோரும் குறளமுதை பருகும் வகையில் பிரெய்லி எழுத்துகளில் அதனை வடி வமைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x