Last Updated : 23 Apr, 2017 10:28 AM

 

Published : 23 Apr 2017 10:28 AM
Last Updated : 23 Apr 2017 10:28 AM

12 ஆண்டுகளாக தொடரும் சேவை: கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர் - விடுமுறை நாட்களில் இலவச வகுப்பு நடத்துகிறார்

கிராமப்புற மாணவர்களை ஆங்கி லத்தில் சரளமாக பேச வைக்கும் முயற்சியில் தனியார் பள்ளி ஆசிரி யர் ஒருவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் தனியார் பள்ளி களை ஒப்பிடும்போது, அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களின் ஆங் கில மொழித் திறன் குறைவாகவே உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையச் செய்யும் அளவுக்கு ஆங்கிலத்தை பயிற்றுவித்தாலே போதும் என்ற மனநிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர்.

ஆங்கில மோகத்தால் கிராமப் புறங்களில் வசிப்பவர்களும், தங்க ளது குழந்தைகளை தனியார் பள்ளி களில் சேர்ப்பது அதிகரிக்கிறது. இருப்பினும், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்கூட தமிழ், ஆங்கிலத்தை சரளமாக வாசிக்கத் தெரியாத நிலை உள் ளது.

தற்போது ‘மூன்றே மாதத்தில் ஆங்கிலம் பேச வைக்கிறோம்’ என்ற அறிவிப்புடன் புதிது புதிதாக ஆங்கிலப் பயிற்சி நிறுவனங்கள் தோன்றினாலும், அவர்கள் ஆயிரக் கணக்கில் கட்டணம் வசூலிப்பதால் இவற்றில் கிராமப்புற மாணவர் களால் எளிதாகச் சேர முடியாது.

இந்நிலையில், கடந்த 12 ஆண்டு களாக நூற்றுக்கணக்கான கிராமப் புற மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளித்து வருகிறார் மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆர்.பாலமுருகன். இவர் சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரிய ராக பணிபுரிகிறார்.

ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற் றுக்கிழமையன்று ஒரு அரசுப் பள்ளியைத் தேர்வு செய்து காலை முதல் மாலை வரை ஆங்கில மொழித்திறன் பயிற்சியை அளிக் கிறார். ஆதரவற்றோர் பயிலும் பள்ளிகளிலும் இப்பயிற்சியை இலவசமாக அளிக்கிறார். மேலும் ஆங்கிலத்தில் பேச ஆசைப்படு வோரது வீடுகளுக்கும் சென்று பயிற்சி அளித்து வருகிறார்.

இதுகுறித்து பாலமுருகன் மேலும் கூறியதாவது: நான் சமூகவியலில் முனைவர் பட்டம் வாங்கி இருந்தாலும், பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வியை சந்தித்தவன். இந்த தோல்விதான் என்னை ஆங்கி லத்தை மென்மேலும் ஆழமாக படிக்கத் தூண்டியது. மதுரை அமெ ரிக்கன் கல்லூரியில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றேன். தற் போது தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரி கிறேன்.

2005-ம் ஆண்டில் 10-வது, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங் கில மொழியை பயிற்றுவிக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். மாதந் தோறும் முன் அனுமதி பெற்று அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலப் பயிற்சியை அளிக்கிறேன்.

ஆனால், சில பள்ளி களில் உள்ள ஆங்கில ஆசிரியர் களே நான் பயிற்சி அளிக்க அனு மதி மறுக்கும் நிலை ஏற்பட்டது.

எளிய முறையில் அதிக இலக் கணம் இன்றி கவிதை, விளை யாட்டு, யதார்த்தம் என மாணவர் களின் மனநிலையை அறிந்து பயிற்சி அளிக்கிறேன். ஆர்வம் இருந் தால் 10 நாட்களில் மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கலாம்.

டிவி, செல்போனை தவிர்த்து தமிழ், ஆங்கில வாசிப்புத் திறனை வளர்த்தால் தானாகவே மொழித் திறன் மேம்படும். இலக்கணம் இன்றி தமிழில் சரளமாக பேசும் போது, அதிக இலக்கணமின்றி ஆங்கிலத்தையும் சரளமாக பேச முடியும். ஆண்டுக்கு ஆயிரத்துக் கும் மேற்பட்ட கிராமப்புற மாண வர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கிறேன்.

அரசியல்வாதிகள் உட்பட யார் விரும்பினாலும், வீடுகளுக்குச் சென்று குறைந்த கட்டணத்தில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக் கிறேன். ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைப்பதே லட்சியம் என்கிறார் பாலமுருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x