Published : 12 Jun 2016 11:47 AM
Last Updated : 12 Jun 2016 11:47 AM

குழந்தைகளின் உழைப்பு - மொட்டிலே பூ கருகுவதற்கு சமம்: இன்று உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்

குழந்தைகள் உழைப்பது பாவச் செயல், குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, மொட்டிலே பூ கருகு வதற்கு சமம். உலகில் எல்லா நாடுகளிலும் சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்டபோதிலும், இந்தி யாவில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களின் கல்வி, தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்காமல் அவர்கள் வளர்ச்சியை உறிஞ்சும் நிலை தொடர்ந்து நடக்கிறது.

14 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாய இலவசக் கல்வி பெற வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறினாலும், 6 முதல் 14 வய துள்ள சிறுவர்கள் மிகக் குறைந்த கூலிக்கு, சாதாரண தொழில் கள் முதல் அபாயகரமான தொழில் களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற வேண் டிய அவசியத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நோக்கம் தற்போது வரை நிறைவடையவில்லை என்றே ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஜனதா தள தொழிலாளர் பேரவைத் தலைவரும், சமூக ஆர்வலருமான ச.சசாங்கன் கூறியதாவது:

குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு

இந்தியாவில் 1981-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 1.4 கோடி. அரசு சாரா நிறுவனம் ஒன்றின் கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 4.4 கோடி எனக் கணக்கிட்டுள்ளது. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1.27 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது.

அரசு குழந்தைத் தொழி லாளர்களை ஒருபுறம் மீட்டு அவர்களுக்கான கல்வி, அன்றாட உணவுகளை கொடுக்கும் திட்டங் களை நிறைவேற்றினாலும், இந்தியா மக்கள்தொகை, வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகம் உள்ள நாடு என்பதால், வறுமை யால் மறுபுறம் குழந்தைத் தொழிலா ளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்தியாவில் எல்லா நகரங்களிலும் குழந்தைத் தொழி லாளர்களை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

கன்னியாகுமரியில் முந்திரி, ரப்பர் தோட்டங்களிலும், திருப் பூரில் பனியன் தொழிலிலும், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், பிற மாவட் டங்களில் சாலையோர உணவகங் கள், செங்கல் சூளைகள், கல் குவாரிகள், மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் இடங்கள், ஹோட் டல், லேத், சிறு இன்ஜினியரிங் யூனிட்கள், மிட்டாய், இறைச்சிக் கடை, டீ கடைகளிலும் 10 மணி முதல் 20 மணி நேர வேலையில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடு படுத்தப்படுகின்றனர்.

இந்தியாவில் தேசிய உற்பத்தி யில் 20 சதவீதம் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பினால் உருவாக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது, அவர்களது பெற் றோருக்கு முன்பணம் மற்றும் கடன் தொகை அளித்து கொத்தடி மைகள் போல வேலை வாங்கப் படுகின்றனர். எத்தனை சட்டங்கள், கண்காணிப்புகள் இருந்தாலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பதே வேதனையான உண்மை.

குழந்தைத் தொழிலாளர் உரு வாக குடும்ப வறுமை, அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருத்தல், பெற்றோரில் ஒருவர் உயிரிழத்தல், குடும்பத் தலைவர் மது மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், குழந்தைகளின் தாய், தந்தையருக்கு இடையில் பிரிவு போன்றவை முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன என்றார்.

தனி அமைச்சகம் வேண்டும்

சமூக ஆர்வலர் ச.சசாங்கன் மேலும் கூறும்போது, “குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தொழிலாளர் நலத்துறையில் இருக்கும் இத்துறையை பிரித்து, தனித்துறையை ஏற்படுத்தி தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதற்கென தனி அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்துவோரை கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோரின் தொழில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குடும்பத்தினரின் வறுமையைப் போக்கி கூடுதல் வருவாய்க்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தினால் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் போக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x