Published : 13 Feb 2017 08:07 AM
Last Updated : 13 Feb 2017 08:07 AM

அதிமுக அரசியல்! - பிப்ரவரி 12ம் தேதி ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்றவை

* நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை ஆர்.ஏ.புரம், பசுமை வழிச்சாலை யில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்ல நுழைவாயில் முன்பு காலை 8 மணி முதலே பொதுமக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் குவியத் தொடங் கினர். காலை 10 மணிக்குமேல் தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

* ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க வந்த தொண்டர் கள், பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்தும், கைகுலுக்கியும், மலர்கொத்து கள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

* பொதுமக்கள் தங்கள் குழந்தை களுடன் வந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந் தித்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். பூந்தமல்லியை சேர்ந்த 75 வயதாகும் ஆயுர்வேத மருத்துவர், தன் மகளுடன் வந்து பல மணி நேரம் காத்திருந்து பார்த்து சென்றார்.

* வெளிநாடுகளிலிருந்தும் சிலர் முதல்வரை பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லண்டனில் இருந்து வந்த இளைஞர் ஒருவர், முதல்வரை நேரில் சந்தித்து அவரிடம் சந்தனமாலையை அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

* ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை நினைவு இல்ல மாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதற்காக 10 இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந் தன. அவற்றில், ஆயிரக் கணக்கானவர்கள் ஆதரவு கையெழுத்திட்டனர்.

* தொண்டர்களின் வசதிக்காக ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு வாசலில் பந்தல் போடப் பட்டிருந்தது. அங்கு வீட்டினுள் நடைபெறும் நிகழ்வுகளை காண பெரிய திரை வைக்கப்பட்டிருந்தது.

* தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவை வழங்கப்பட்டன.

* சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொளத்தூர் முதல் ஆர்.ஏ.புரம் வரை 200-க் கும் மேற்பட்ட ஆட்டோக்களில் பேரணியாக வந்த மக்கள், ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித் தனர்.

* முதல்வர் வீட்டருகில், தற்போது 10க்கும் மேற்பட்ட சிறுகடைகள் முளைத்துள்ளன. சுண்டல், வேர்க்கடலை, வறுத்த வேர் கடலை கடைகள், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெய லலிதா படங்கள், ஸ்டிக்கர்கள் விற்கும் கடை, அதிமுக துண்டு விற்கும் கடையும் தற்போது முளைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x