Published : 22 Mar 2017 07:36 AM
Last Updated : 22 Mar 2017 07:36 AM

சென்னையில் மருத்துவ மாணவர் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் டீன் நேரில் ஆஜராகி பதில் மனு

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத் துவர்கள் நடத்திய போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த பாதிப் பும் ஏற்படவில்லை என மருத்துவ மனை டீன், உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சி.குமரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக சிகிச்சை பெற முடியாமல் திரும்பி வந்தேன். எனவே, மருத்து வர்களின் சட்டவிரோதப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மருத்துவ மனைக்கு ஒதுக்கப்படும் நிதி, மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பி, மருத்துவமனை டீன் நேரில் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் கே.நாராயணசாமி, உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று நேரில் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். புறநோயாளிகள் பிரிவு அனுமதிக்கப்பட்ட மருத் துவர்களின் முழு எண்ணிக்கை யுடன் அனைத்து நாட்களிலும் தடையின்றி செயல்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 16-ம் தேதி நோயாளியுடன் வந்த உறவினர், பயிற்சி மருத்துவ மாணவரை தாக்கியதால் மருத்துவ மாண வர்கள்தான் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எந்த மருத்துவரும் பங்கேற்கவில்லை. அன்றைய தினம் அனைத்து மருத்துவர்களும், ஊழியர்களும் பணியில்தான் இருந்தனர். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.78 கோடி ஒதுக்கீடு

இந்தப் போராட்டத்தால் மருத்துவமனை செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நோயாளிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மருந்துகள், உபகரணங்கள், சிறப்பு மருந்துகள் வாங்க ரூ.78 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இவ்வாறு பதில் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘‘நீதிமன்றத்தால் எழுப்பப் பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மருத்துவமனை டீன் நேரில் ஆஜராகி திருப்தியாக பதிலளித் துள்ளார். எனவே, அடுத்த விசா ரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப் படுகிறது’’ என கூறி விசா ரணையை ஏப்ரல் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x