Published : 31 Mar 2014 12:08 PM
Last Updated : 31 Mar 2014 12:08 PM

10 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டி

சமாஜ்வாதி கட்சி தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட உள்ளது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோ யாதவ் தெரிவித்தார்.

“தமிழகத்தில் 10 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடுகிறது. முதல் கட்டமாக மயிலாடுதுறை, தேனி, ராமநாதபுரம், திருவண்ணா மலை, பொள்ளாச்சி, வேலூர், கரூர் ஆகிய 7 தொகுதிக் களுக்கு வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டுள்ளனர். மேலும் 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

பிரச்சாரத்துக்காக கட்சியின் தலைவர் முலாயம்சிங் அல்லது உ.பி முதல்வர் அகிலேஷ்யாதவ் ஏப்ரல் 14-ம் தேதி தமிழகம் வருவார். தமிழகத்தில் இடதுசாரிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம் என்றார் இளங்கோ யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x