Published : 14 Jul 2016 09:37 AM
Last Updated : 14 Jul 2016 09:37 AM

தேமுதிக அறக்கட்டளைக்கு ரூ.500 கோடி வந்தது என்று நிரூபிக்க முடியுமா? - தேமுதிக பொருளாளர் சவால்

தேமுதிக அறக்கட்டளைக்கு ரூ.500 கோடி பணம் வந்தது என்று குற்றஞ்சாட்டும் எஸ்.ஆர்.பார்த்திபன் அதனை நிரூபிக்க முடியுமா என்று தேமுதிக பொருளாளர் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தேமுதிகவிலிருந்து விலகிச் சென்ற வி.சி.சந்திரகுமார் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் திமுகவின் தூண்டுதலின்பேரில் அவதூறு பரப்புகின்றனர். தேமுதிக அறக்கட்டளைக்கு ரூ.500 கோடி வரவு வந்தது என்பதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? கட்சியின் வரவு, செலவு கணக்குகளை முறை யாக வருமான வரி கணக்கிலும், பொதுக் குழுவிலும், தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பித்து வருகிறோம்.

தேமுதிக கணக்கையும், அறக்கட்டளை கணக்கையும் தெளிவுபடுத்த நான் தயார். விரும் பிய கட்சியோடு கூட்டணி இல்லை என்று தலைவர் சொன்னவுடன் கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள், கட்சியைப் பற்றியும், விஜயகாந்த் பற்றியும், அத்துமீறி அவதூறு பரப்பினால், தேமுதிகவால் நீங்கள் பெற்ற ஆதாயங்களையும் ஆதாரப் பூர்வமாக வெளியிடுவோம். பொய்யான செய்திகளை பரப்பு வதற்கு உங்கள் மீது சட்டப்பூர்வ மாக நடவடிக்கையும் எடுக்கப் படும் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி மூளை சலவை செய்துவரும் இவர்களை தேமுதிக தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x