Published : 01 Mar 2017 10:04 AM
Last Updated : 01 Mar 2017 10:04 AM

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துக் கேட்பு

கட்சியின் ஆக்கப் பணிகள் குறித் தும், உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவா லயத்தில் பிப்.28-ம் தேதி நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் தலைமையில், கட்சிப் பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன் னிலையில் நேற்று நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம், சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தங்கவேல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்குப் பதிலாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக ரகுபதி நிய மிக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செய லாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் 65 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டம் முடிந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில், “கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது” என்றார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலை வரும் மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கூட்டத் தில், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க மாவட்ட செயலாளர்கள் மற்ற நிர்வாகிகளையும், தொண் டர்களையும் தயார்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட் டணிக் கட்சிகளோடு சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க லாமா அல்லது தனியாகச் சந்திக்க லாமா என்றும், ஏற்கெனவே அறிவிக் கப்பட்ட வேட்பாளர்களையே போட்டியிடச் செய்யலாமா அல் லது புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்புத் தரலாமா என்றும் விவா திக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x