Published : 08 Jun 2017 08:43 AM
Last Updated : 08 Jun 2017 08:43 AM

தம்பதி கொலையில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம் ஆலங் குளம் அருகே உள்ள கண்ணாடி குளத்தைச் சேர்ந்த பால் வியாபாரி சுப்பிரமணியன்(38). இவர் 2010 நவ.21-ம் தேதி கொலை செய்யப் பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் உட்பட சிலரை போலீஸார் கைது செய்தனர்.

ஜாமீனில் செல்வராஜ் வெளியே வந்திருந்த நிலையில், 2011 மே 19-ம் தேதி அவரும், அவரது மனைவி தங்கமணியும் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக, சுப்பிரமணியனின் மனைவி மாரியம்மாள்(36), எம்.வெள்ளத்துரை (42), அவரது சகோதரர்கள் குமார்(39), உடையார் (34), எம்.சுப்பிரமணியன் (30), சேகர் (26) மற்றும் எஸ்.மாடசாமி (38), டி.இளங்கோ (38), கே.மணிகண்டன் (36), ஏ.நடராஜன் (26) ஆகிய 10 பேரை ஊத்துமலை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. மாரியம்மாள் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,300 அபராதமும் விதித்து, நீதிபதி ஈஸ்வரன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x