Published : 01 Jun 2016 08:46 AM
Last Updated : 01 Jun 2016 08:46 AM

கோகுல்ராஜ் தற்கொலைக்கு ஆதாரங்கள் உள்ளன: வேலூரில் யுவராஜ் தகவல்

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டதற் கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த 8 மாதங்களாக வேலூர் சிறை யில் இருந்த அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

அதன்படி, வேலூர் மத்திய சிறை யில் இருந்து வெளியே வந்த யுவராஜ் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை. அவர் தற்கொலைதான் செய்து கொண்டார். இதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலைக்கு தூண்டப்பட்டார்.

அவரது மரணத்துக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நீதிமன்றத்தில் எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பித்து உண்மையை வெளிக்கொண்டு வருவேன்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ் துவர்களுக்கு கோயில் இருப்பது போல எல்லா மதத்தினருக்கும் ஒட்டு மொத்த கோயில் நீதிமன்றம். அங்கு நீதிபதிதான் கடவுள். நீதிபதிகளிடம் உரிய ஆதாரங்களைக் காட்டி நான் நிரபராதி என்று நிரூபிப்பேன். குற்ற வாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

தமிழகத்தில் போலீஸார் உச்ச கட்ட மனஉளைச்சலில் பணிபுரி கின்றனர். அடிமட்ட போலீஸார் முதல் உயர் அதிகாரிகள் வரை 24 மணி நேரமும் மன உளைச்சலில் பணியாற்றுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். எனவே, தமிழக அரசு காவல் துறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.

அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. திமுக, அதிமுகவினருடன் நட்புடன் பேசி வருகிறேன். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டால் தனியாக போட்டியிடு வேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x