Published : 12 Jan 2017 11:16 AM
Last Updated : 12 Jan 2017 11:16 AM

நடுத்தர, சிறிய தடுப்பணைகள் கட்ட முடிவு: வறட்சியை சமாளிக்க மாவட்டம்தோறும் நீர்ப்பாசனத் திட்டம்

தமிழகத்தில் எதிர்காலத்தில் வறட்சியை சமாளிக்க சிறிய, நடுத்தர அணைகள் கட்டுவதற்கும், புதிய பாசனத் திட்ட ங்களை உருவாக்குவதற்கும் மாவட்டம்தோறும் கருத்துரு பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.

நாடு சுதந்திரமடைந்த பின், தமிழகத்தில் 1962-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிகமான நீர்ப்பிடிப்புப் பகுதிகளை உள் ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் நடுத்தர மற்றும் பெரிய அணைகள் கட்டப்பட்டன. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நீர்ப் பற்றா க்குறையைப் போக்க அப்போதே தொலைநோக்குப் பார்வையுடன் இந்த பெரிய, சிறிய அணைகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட் சியில் இருந்து தற்போது வரை 115 நடுத்தர மற்றும் பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

2005-ம் ஆண்டு வரை அனைத்து பருவ காலங்களிலும் ஓரளவு மழைப் பொழிவு இருந் ததால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. தற்போது மழையின் போக்கு, பருவமழையில் மாற்றங்களால் அணைகளுக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை. மழைநீரின் அளவு குறைந்ததால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் சரிந்தது. இதனால் தற்போது விவசாயத்துக்கும், குடி நீருக்கும் சிக்கல் ஏற்பட்டு வறட்சி நிலவுகிறது.

இந்நிலையில், தற்போது மாவட் டங்கள்தோறும் வறட்சி பாதி ப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

அனைத்துத் துறைகளை உள்ளடக்கிய வறட்சி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வறட்சி பாதிப்பு கணக்கிடப்பட்டு, எதிர்காலத்தில் வறட்சியை சமாளிக்க புதிய நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ள நடுத்தர, சிறிய அணைகள் அமைக்கும் திட்டங்களை தற்போது மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மலையடிவார மற்றும் குன்றின் அடிவாரங்களில் செம்மண், சரளை மண்ணை அடிப்படையாகக் கொண்ட திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறுகளுக்கு பாசனம் தரும் வகையிலான கசிவுநீர் குட்டைகளை புதிதாக அமைக்கவும், ஏற்கெனவே பல்வேறு திட்டங்களின் வழி யாக, மாவட்டம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் செயல் படுத்தப்பட்ட சிறிய, பெரிய தடுப்பணைகள் விவரம், அவை பழுதடைந்திருந்தால் அவற்றை சீர்செய்ய ஆகும் செலவை மதிப்பீடு செய்யும் பணியும் முழு வீச்சில் தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: பெரிய மற்றும் சிறிய ஆறுகள், சில்லோடைகள் மற்றும், பெரிய ஓடைகளில் நிரந்தர பாசன அமைப்புகள் (நடுத்தர, சிறிய தடுப்பணைகள்) ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஒன்றியங்களில் இருக்கும் நில அமைப்பு மேடு, பள்ளமாக இருந்தாலும் அந்தந்த பகுதியின் சரிவு மண் வகைக்கு ஏற்ப பாசனத் திட்டங்களை பொதுப்பணித் துறை, வேளாண் பொறியியல் துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி முகமை போன்றவை மூலம் பாசன வசதிகள் செய்து தர கருத்துரு பெறப்பட்டு வருகிறது. இந்த கருத்துருக்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டவுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாவட் டத்துக்கான முழுமையான மாவட்ட நீர்ப்பாசனத் திட்டம் என்னும் முழுமையான கருத்துரு தயாரிக்கப்படும். இதில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் அந்தந்த துறைகளுக்கு பெறப்படும் நிதி யின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

முதற்கட்டமாக மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மாவட் டங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களில் இதற்கான ஆலோசனைகள், ஆய்வுகள் நடை பெறுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x