Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM
முதல்வர் ஜெயலலிதாவை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்தித்து, தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செய லாளரும் முதல்வரு மான ஜெயலலிதாவை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் சென்னையில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக முதல்வரிடம் அவர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுச்செயலாளர் காவேரி, இணை பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் காமராஜ், தொழிற் சங்கத் தலைவர் கே.வி.சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
சரத்குமார் சந்திப்பு
முதல்வர் ஜெயலலிதாவை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தமது கட்சியின் முழு ஆதரவையும் தெரிவித்துக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT