Published : 28 Feb 2017 09:45 AM
Last Updated : 28 Feb 2017 09:45 AM

சென்னையில் இன்று கூட்டம்: மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

பரபரப்பான அரசியல் சூழலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறு கிறது.

திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல் வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரு கின்றன. அதிமுக பொதுச்செய லாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்த, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

அதே நேரத்தில் ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா, ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

அதிமுக 3 அணிகளாக பிரிந்து கிடக்கும் பரபரப்பான சூழ்நிலை யில் திமுக மாவட்டச் செயலாளர் கள் கூட்டம் நடைபெறுவது குறிப் பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிர ஸுக்கு எத்தனை சதவீத இடங் களை ஒதுக்குவது, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை எப்படி சாதகமாகப் பயன்படுத்திக் கொள் வது, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை எதிர்கொள்வது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x