Published : 12 Apr 2014 12:10 PM
Last Updated : 12 Apr 2014 12:10 PM

தேர்தல் பணி ஊழியர்கள் கணினி மூலம் தேர்வு

நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி, திருவள்ளூர் மாவட்டத் தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,014 வாக்குச் சாவடிகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மத்திய, மாநில அரசுப் பணியாளர் கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களை கணினி மூலம் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யும் பணி, ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்டத் தேர்தல் அதிகாரியான வீரராகவ ராவ் மற்றும் திருவள்ளூர் நாடாளு மன்றத் தொகுதிக்கான பொதுப் பார்வையாளர் அனந்தராமு ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதன்படி, கும்மிடிப்பூண்டியில் கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்னேரியில் ஜெய கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லியில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆவடியில் ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யா லயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாதவரத்தில் ஓ.ஆர்.ஜி.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்தணியில் தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரவாயலில் அரசு மேல்நிலைப் பள்ளி, அம்பத்தூரில் பக்தவச்சலம் நினைவு மகளிர் கல்லூரி, திருவொற்றியூரில் வெள்ளையன் செட்டியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

தேர்தல் பணி அலுவலர்கள் கணினி மூலம் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வமணி, ஆட்சிரியன் நேர்முக (தேர்தல்) உதவியாளர் சொக்கலிங்கம், தேசிய தகவலியல் அலுவலர் பழனிராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x