Published : 29 Jan 2017 09:36 AM
Last Updated : 29 Jan 2017 09:36 AM

நன்மங்கலம் உள்ளிட்ட இடங்களில் ‘தி இந்து’ குழுமம் சார்பில் மரக்கன்றுகள் பராமரிப்பு

‘தி இந்து’ குழுமம் சார்பில் நன்மங்கலம் வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று மரக்கன்றுகள் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் வார்தா புயலால் இழந்த பசுமை போர்வையை மீட்டெடுக்கும் விதமாக ‘பசுமை சென்னை’ என்ற கருப்பொருளை ‘தி இந்து’ குழுமம் உருவாக்கியுள்ளது. அதன்மூலம், தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து, வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது.

இந்த வாரம், இந்திய சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அறக் கட்டளை யுடன் இணைந்து, நன்மங்கலம் வனப்பகுதி, மண்ணி வாக்கம் கரசங்கால் ஏரிக்கரை, அரசங்கழனி ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே நடப்பட்ட மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் கள் அறக்கட்டளையினர் கூறும்போது, ‘‘நன்மங் கலம் வனப்பகுதி, மண்ணிவாக்கம் கரசங்கால் ஏரிக்கரை, அரசங்கழனி ஏரிக்கரை ஆகிய 3 இடங் களிலும் ஏற்கெனவே 230 மரக்கன்றுகளை நட்டிருக் கிறோம். தற்போது அப்பகுதியில் மழை பெய்திருப்பதால், அந்த நீர் ஆவியாவதைத் தடுக்க, மரக்கன்றுகளைச் சுற்றி மர இலைகளைப் பரப்பும் பணியில் ஈடுபட்டோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x