Last Updated : 28 Sep, 2016 08:55 AM

 

Published : 28 Sep 2016 08:55 AM
Last Updated : 28 Sep 2016 08:55 AM

கூட்டணி முயற்சி தோல்வியால் தனித்து விடப்பட்ட தமாகா: எதிர்காலம் குறித்து நிர்வாகிகள் அச்சம்

திமுகவுடனான கூட்டணி முயற்சி கள் தோல்வி அடைந்ததால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு தமாகா தள்ளப்பட்டுள்ளது.

மேலிடத் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலால் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், கடந்த 2014 நவம்பர் 28-ல் தமாகா என்ற புதிய கட்சியைத் தொடங் கினார். முன்னாள் மத்திய அமைச் சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.பி.க்கள் பி.எஸ். ஞானதேசிகன், பீட்டர் அல் போன்ஸ், முன்னாள் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட காங்கிரஸின் மூத்த நிர்வாகி கள் பலரும் தமாகாவில் இணைந்தனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்த லில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாசன் முயற்சி மேற் கொண்டார். இந்தக் கூட்டணி அமைவது உறுதி என்ற நம்பிக்கை யில் தமாகாவினர் இருந்தனர். ஆனால், ‘ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும்’ என அதிமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதால் மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டிய கட்டாயம் வாசனுக்கு ஏற்பட்டது.

மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் அதிமுகவில் இணைந்தார். முன்னாள் எம்.பி.க்கள் பீட்டர் அல்போன்ஸ், பி.விஸ்வநாதன், ராணி உள்ளிட் டோர் காங்கிரஸில் இணைந்தனர். ம.ந. கூட்டணியில் 26 இடங்களைப் பெற்று போட்டியிட்ட தமாகா அனைத்து இடங்களிலும் டெபாசிட் தொகையை இழந்ததுடன் ஒரு சதவீத வாக்குகளைக்கூட பெறவில்லை.

தேர்தலுக்குப் பிறகு தமாகா நிர்வாகிகள் வேலூர் ஞானசேகரன், சாருபாலா தொண்டமான் மற்றும் முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் பலர் அதிமுகவில் இணைந்தனர். முக்கிய நிர்வாகி கள் பலர் வெளியேறிக் கொண்டி ருக்க, இருப்பவர்களைத் தக்க வைக்க வேண்டிய நிலைக்கு வாசன் தள்ளப்பட்டார். உள்ளாட் சித் தேர்தலில் திமுகவுடன் கூட் டணி வைத்தால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என மாநில நிர்வாகிகளும், மாவட் டத் தலைவர்களும் வாசனிடம் வலியுறுத்தினர்.

ஸ்டாலினுடன் சந்திப்பு

அதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத் தில் வாசன் சந்தித்துப் பேசி னார். உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும், அது தொடர்பாக ஸ்டாலினுடன் பேசிய தாக வாசன் வெளிப்படையாகவே அறிவித்தார். ஓரிரு நாளில் கருணா நிதியை சந்திக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்டாலின் - வாசன் சந்திப்பால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், தமாகாவை கூட்டணியில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஸ்டாலினை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர், தமாகா கூட்டணியில் இருந்தால் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருக்காது என்ற ராகுல் காந்தியின் முடிவை தெரிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் தமாகாவுக்கு இடம் கிடைக்கவில்லை. மீண்டும் மக்கள் நலக் கூட்டணியில் சேர தமாகாவினர் விரும்பவில்லை. எனவே, தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயம் தமாகாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமாகா தனித்துப் போட்டி என வாசன் அறிவித்துவிட்டார்.

இது தொடர்பாக தமாகா மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘அதிமுக தன்னை கைவிடாது என வாசன் நம்பினார். ஆனால், கடைசி நேரத்தில் கைவிட்டதால் சட்டப்பேரவைத் தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித் தோம். இப்போது வலியச் சென்றும் கூட்டணிக்கு திமுக மறுத்துவிட்டது. அடுத்து வரப் போவது மக்களவைத் தேர்தல். அதிலும் காங்கிரஸையே திமுக தேர்வு செய்யும். எனவே அதிமுக, திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. இந்த யதார்த்த உண்மையை புரிந்துகொண்டு வாசன் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமாகாவுக்கு எதிர்காலம் இருக்காது'' என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x