Published : 08 Jan 2017 12:00 PM
Last Updated : 08 Jan 2017 12:00 PM

சதீஷ் மரணம் அப்பட்டமான கொலை: விசிக சிந்தனைசெல்வன் கருத்து

விழுப்புரம் அருகே பெரியபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற இளைஞர் கடந்த 4-ம் தேதி மின் கம்பத்தில் கட்டிவைத்து தீவைத்து கொளுத்தியதாக கூறப் படுகிறது. இதில் அவர் மரண மடைந்தார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன் கூறியதாவது: இது அப்பட்டமான கொலை முயற்சி, அதனால் தான் சதீஷ் உயிரிழந்தார். நீதிபதி முன் னிலையில் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். மின்சாரம் தாக்கி இறந்தாரா என்பதை சுலபமாக அறிய முடியும். இதற்கு பிரேத பரிசோதனை தேவையில்லை. அப்படி பிரேத பரிசோதனை செய்யப்பட்டால் நீண்டகாலம் காத்திருக்கும் சூழல் உள்ளது. எனவே உடலடக்கத்திற்கு முன்பாக பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கப்பட வேண் டும். பதற்றத்தில் போலீஸிடம் சொல்லிய வாக்குமூலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.

பொதுவாக போலீஸில் எழுதி வைத்து கையெழுத்து வாங்கும் வழக்கம் உண்டு. அந்த வழக்கம் சதீஷ் வாக்குமூலத்திலும் நடந் திருக்க வாய்ப்புண்டு. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. சிறப்பு புலனாய்வு அதி காரியை நியமித்து அவரிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும்.

இதுதொடர்பாக எஸ்.பி., நரேந்திரன் நாயர் கூறுகையில், “சதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மருத் துவர்கள் முன்னிலையில் போலீ ஸாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தற்கொலை முயற்சி என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் இறந்த பிறகு சந்தேக மரணம் என்று மாற்றப்பட்டுள்ளது. அவரது உறவினர்களின் தரப்பில் பிரேத பரிசோதனையை குழுவான மருத்துவர்கள் மேற்கொள்ள வேண் டும் என்றனர். அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டது. இன்று (ஜன.8) பிரேத பரிசோதனை நடைபெறும். அதன்பின் இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப் படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x