Published : 02 Feb 2017 09:44 AM
Last Updated : 02 Feb 2017 09:44 AM

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ மாநில அளவிலான மாதிரி நுழைவுத் தேர்வு

பிளஸ் 2 மாநில பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களும் ‘நீட்', 'ஜேஇஇ' ஆகிய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என அறிந்துகொள்ளும் வகையில் மாநில அளவிலான மாதிரி நுழைவுத் தேர்வை ‘தி இந்து' தமிழ் நாளிதழ், ஆஸ்பயர் லேர்னிங் நிறுவனம்,  சாஸ்தா கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.

மாநில கல்வி வாரியம். நீட், ஜேஇஇ ஆகிய அனைத்துக்கும் பாடத்திட்டம் ஒன்றுதான். ஆனால், அணுகுமுறை மட்டும்தான் வேறு. எதையும் மனப்பாடம் செய்யாமல் அடிப்படை நுணுக்கங்களை நன்றாக புரிந்து படித்தால் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளில் அதிக கட்-ஆப் மதிப்பெண் பெற்று இந்திய அளவில் சிறந்த மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரியில் சேர முடியும். இந்த மாநில அளவிலான மாதிரி நுழைவுத் தேர்வை எழுதுவதன் மூலம் உண்மையான தேர்வு எழுதும் முன் அனுபவம் கிடைக்கும். உண்மையான நுழைவுத் தேர்வில் என்ன ரேங்க் கிடைக்கும் என்பதை தோராயமாக அறிய உதவும். தேர்வுக்கான தயார் நிலையை அறிவதன் மூலம் சரியான முறையில் பயிற்சி பெற முடியும். வேகமாகவும், துல்லியமாகவும் பதிலளிக்கும் திறனை பெற முடியும்.

தொடர்பு கொள்ள..

நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள ஆஸ்பயர் லேர்னிங் மையத்துக்கு சென்று பதிவு செய்யலாம். அல்லது www.aspirelearning.com என்ற இணையதளம் மூலம் பணம் செலுத்தியும் பதிவு செய்யலாம். பதிவுக் கட்டணம் ரூ.500. மேலும் விவரங்களுக்கு 9840632977, 7338851114 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை தங்களது பள்ளியிலேயே தங்களின் மாணவர்களுக்கு அளிக்க விரும்பும் ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் 8754472060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x