Published : 12 May 2017 12:46 PM
Last Updated : 12 May 2017 12:46 PM

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதி கல்வித்துறை இணையதளத்திலும், 17-ம் தேதி அன்று பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கல்வித்துறை இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை அளித்து தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும்.

வரும் 15-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x