Published : 02 Feb 2014 04:45 PM
Last Updated : 02 Feb 2014 04:45 PM

குரூப்-1: 79 காலியிடங்களுக்கு 1.8 லட்சம் பேர் போட்டி

துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 79 காலியிடங்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள்.

மூன்று துணை ஆட்சியர்கள் (ஆர்.டி.ஓ.), 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், 33 வணிகவரி உதவி ஆணையர்கள், 10 ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களை (மொத்தம் 79 இடங்கள்) நேரடியாக நியமிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த டிசம்பர் 29-ம் தேதி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.

முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதிலிருந்து, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் அனுமதிக்கப் படுவர். எனினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களையும் மெயின் தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

70 பேருக்கு சிறப்பு அனுமதி

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 என்றும், மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த 5 ஆண்டு பணிநியமன தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டதையும், அடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வழங்கிய 5 ஆண்டு வயது வரம்புச் சலுகையை பயன்படுத் திக் கொள்ள முடியாததையும் குறிப்பிட்டு தங்களை குரூப்-1 தேர்வெழுத அனுமதிக்குமாறு வயது வரம்பை கடந்த சுமார் 70 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

அவர்களை தேர்வெழுத அனுமதிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி 70 பேர் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்

பித்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் குரூப்-1 முதல்நிலைத்தேர்வுக்கு சில நிபந்தனைகளுடன் தற்காலி கமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x