Published : 06 Nov 2016 12:33 PM
Last Updated : 06 Nov 2016 12:33 PM

திருப்பரங்குன்றத்தில் பணப் புழக்கம் தாராளம்: அதிமுக, திமுக இடையே கடும் போட்டி

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக, திமுக இடையே பிரச்சாரத்தில் ஏற்பட்டுள்ள போட்டியால் பணப் புழக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவ.19-ல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என திமுகவும், 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற அதிமுகவும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இத்தொகுதியில் கிராமப் பகுதிகளில் 132, நகர்ப் பகுதிகளில் 159 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 291 வாக்குச்சாவடிகள், 2.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிமுக 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இடைத்தேர்தலில் இந்த எண்ணிக்கையை ஒரு லட்சம் என இலக்கு வைத்து, குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அதிமுக திட்டமிட்டுள்ளது.

திமுக தரப்பில் முதல்வரின் உடல்நிலை, வேட்பாளர் சார்ந்த சமுதாய வாக்குகள், புதிய உற்சாகத்துடன் களமிறங் கியுள்ள கட்சியினர் என பல் வேறு காரணங்களால் அதிமு கவிடமிருந்து வெற்றியை பறிக்கும் இலக்குடன் களமிறங்கி உள்ளனர்.

இவ்விரு கட்சியைச் சேர்ந்த மதுரை உள்ளிட்ட 9 தென் மாவட்டத்தினர் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டத்தினரும் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். அதிமுகவினர் ஒரு வாக்குச்சாவடிக்கு 100 பேர் வரையிலும், திமுகவினர் 20 பேரும் முகாமிட்டுள்ளனர். இவர்களுடன் உள்ளூர் கட்சியினரும் சேர்ந்துள் ளனர். முதற்கட்டமாக கட்சி ஆதரவு வாக்குகள், எதிர் வாக்குகள், கட்சி சாரா வாக்குகள், கடந்த தேர்தல்களில் கட்சி வாரியாக கிடைத்த வாக்குகள் என கணக்கெடுத்துள்ளனர். ஒரு குழுவுக்கு 100 வாக்குகள் என பிரித்துக்கொண்டு வாக்காளரை தினசரி 2 முறை தேடிச் செல்கின் றனர்.

அதிமுக கடந்த நவ.2-ம் தேதியில் இருந்தும், திமுக நேற்று முதலும் களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கட்சி பிரமுகர்கள் கூறியதாவது: ஆரத்தி எடுப்பவர்கள், வேட்பாளர் பிரச்சாரத்துக்கு வரும்போது கூடும் அந்தந்த பகுதியினர், வேட் பாளருடன் கூடவே செல்லும் கட்சியினர், அந்தந்த பகுதியில் தேர்தல் அலுவலகத்துக்கு தினசரி வந்து செல்வோர், வாக்காளர்களை சந்திக்க வெளியூர்காரர்களை அழைத்துச் செல்லும் உள்ளூர்வாசிகள் என பல்வேறு வகையாக பிரித்து தினசரி செலவுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. இதில் திமுகவைவிட அதிமுக ஒரு நபருக்கு ரூ.100 அதிகம் வழங்குகிறது. இது தவிர வெளியூர் பிரமுகர்கள் தங்க வீடு, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்காக தினசரி ஒரு நபருக்கு ரூ.600, குழு தலைவருக்கு தினசரி ரூ.1000 வழங்கப்படுகிறது. வாக்குச்சாவடி வாரியாக தின சரி ரூ.3000 முதல் ரூ.5000 வரை வழங்கப்படுகிறது. டீ, காபி உள்ளிட்ட செலவுக்கு இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட செலவுகள் அனைத்தும் கட்சியின் தேர்தல் பணிக்குழுவுக்கு தெரிந்து நடப் பது. இதைத்தவிர அந்தந்த பகுதி பொறுப்புக்குழுவில் உள்ளவர் களை பொறுத்து கூடுதல் செலவு செய்யப்படுகிறது. உள்ளூர் வாக் காளர்களை கவர்ந்து அதிக வாக்குகளை பெற்றுத் தந்து கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக, திமுக முக்கிய பிரமுகர்கள் பல ரும் கூடுதல் செலவு செய்து வரு கின்றனர்.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பாளராக உள்ள நிலையூர் பகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு 500 பேர் வரை அதிமுகவினர் திரண்டுள்ளனர்.

வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள், நேரடியாக பண விநி யோகம் எதுவும் இதுவரை நடக்க வில்லை. இதற்காக மறைமுகமாக இரு கட்சிகளும் திட்டமிட்டு வரு கிறது. இதில் முந்திக் கொள்வது யார், வாக்காளரை அதிகம் கவ ரும் வகையில் செயல்படப் போவது யார் என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் ‘கவனிக்கப்படும்போது’ பணப் புழக்கம் மேலும் அதிகரிக்கும். இதுவரை தேர்தல் அதிகாரிகள் கெடுபிடி ஏதும் இல்லாமல் பிரச்சாரம் நடக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x