Published : 16 Mar 2016 08:36 PM
Last Updated : 16 Mar 2016 08:36 PM

முதல்வர் வேட்பாளராக ஏற்கும்படி விஜயகாந்த் கேட்டால் பரிசீலிப்போம்: பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் அறிவிப்பு

முதல்வர் வேட்பாளராக தன்னை ஏற்றுக் கொள்ளும்படி விஜயகாந்த் எங்களிடம் கேட்டால் அதுபற்றி பரிசீலிப்போம் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறினார்.

சென்னை கமலாலயத்தில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஊழல், நிர்வாகத்திறனற்ற ஆட்சியால் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை பாஜக ஆரம்பம் முதலே சொல்லி வருகிறது. திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். அவர்களுக்கு மாற் றாகத்தான் பாஜக இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டு வைக்காது. திமுக , காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்திக்கும்.

234 தொகுதிகளிலும் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித் தவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்துள்ளோம். குற்றப்பின்னணி உள்ள வர்களை வேட்பாளராக நிறுத்த மாட்டோம்.

தேமுதிக தங்களின் அணியில் சேரும் என்று திமுக தலைவர் கருணாநிதி காத்திருந்தார். ஆனால், பழம் நழுவி பாலில் விழவில்லை. காலம் முழுக்க காத்திருக்கும் நிலைக்கு கருணாநிதி ஆளாகியுள்ளார். இதனால், தமிழகத்தில் பலமுனை போட்டி நிலவுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான இளம் வாக்காளர்களை குறிவைத்தே பாஜக செயல்படும். திமுக, அதிமுக அல்லாத மாற்று அரசியலை முன்னெடுக்க விரும் புபவர்கள் பாஜகவுடன் இணையலாம். தேமுதிகவுக்கும் பாஜகவுக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்கள்தான் உள்ளது. பாஜக தரப்பில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். தேவைப்பட்டால் முதல்வர் வேட்பாளரை ஏற்போம். விஜயகாந்த், தன்னை முதல் வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்று கருதினால், அதுபற்றி எங்களிடம் பேசலாம். அதை நாங்கள் பரிசீலிப்போம்.

தேமுதிக தலைமையை ஏற்பவர்கள் எங்களுடன் பேசலாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியது நம்பிக்கை அளித்துள்ளது. விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x