Published : 14 Jan 2017 11:10 AM
Last Updated : 14 Jan 2017 11:10 AM

தாம்பரத்தில் 22 ஆண்டுகளாக மூடியிருக்கும் எம்.ஜி.ஆர். சிலை: அதிமுக கோஷ்டி பூசலால் நூற்றாண்டிலாவது திறக்க பொதுமக்கள் கோரிக்கை

தாம்பரத்தில் அதிமுக கோஷ்டி பூசலால் கடந்த 22 ஆண்டுகளாக மூடியிருக்கும் எம்.ஜி.ஆர் சிலையை அவரது நூற்றாண்டிலாவது திறக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண் கல சிலை கடந்த 1995-ம் ஆண்டு தாம்பரம் சண்முகம் சாலை - ஜி.எஸ்.டி சாலை இணைப்பில் நிறுவப்பட்டது. தாம்பரத்தின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரான மறைந்த எல்ல.ராஜமாணிக்கம் முயற்சியால் இந்த சிலை அமைக்கப்பட்டது.

இந்த சிலை திறப்பு விழா நடக்க விருந்த நிலையில் பொதுமக்களுக் கும், போக்குவரத்துக்கும் இது இடை யூறாக இருப்பதாகக் கூறி தாம்பரத்தை சேர்ந்த மறைந்த வழக்கறிஞர் அருணா சலம் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனால் சிலையை திறக்க நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து எம்.ஜி.ஆர் முழு உருவச்சிலை அதே இடத்தில் கோணியால் சுற்றப்பட்டு, இரும்பு தகடுகளால் மூடப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு தாம்பரத்தில் ஜி.எஸ்.டி சாலை, வேளச்சேரி சாலை, முடிச்சூர் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் சிலை அங்கிருந்து 100 அடி தொலை வில் உள்ள ஜீவாவின் சிலை அருகே இடமாற்றம் செய்யப்பட்டது. இடம் மாற்றம் செய்யப்பட்டும் மூடிய நிலை யிலேயே சிலை வைக்கப்பட்டது.

2011 தேர்தலில் அதிமுக தமிழகத் தில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தாம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.எம். சின்னையா தமிழக அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது சிலை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திறக்கப்படவில்லை. போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் சிலையை திறக்கலாம் என நீதிமன்றம் கூறியும் கோஷ்டி மோதல் காரணமாக அதிமுகவினர் சிலையை திறக்க முன்வரவில்லை.

தற்போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையிலா வது இந்த சிலையை திறக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து எம்.ஜி.ஆர் தொண் டர் ஒருவர் கூறும்போது, “இந்த சிலையை வைத்தது, எல்ல. ராஜ மாணிக்கம் என்பதால் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த அவரது அரசியல் எதிரிகள் இதைத் திறக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தற்போது நூற்றாண்டு விழாவில் சிலையை திறக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள இடத்தில் இருந்து வேறு இடத்தில் வைப்பதற்காக மூன்று இடங்களை தேர்வு செய்து, மாநில தலைமைக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1955-ம் ஆண்டு ரூ.1 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த சிலையின் தற்போதைய மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்” என்றார்.

தாம்பரத்தில் 22 ஆண்டுகளாக திறப்புவிழா காணாமல் மூடி வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை.

படம்: பெ.ஜேம்ஸ்குமார்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x