Published : 30 May 2017 03:26 PM
Last Updated : 30 May 2017 03:26 PM
நடிகர் ரஜினிகாந்த் பாமகவை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அன்புமணி சிறந்த நிர்வாகி, சிறந்த தலைவர், எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு எல்லாம் தெரியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறுகிறார்.
ரஜினிகாந்த் பாமகவை ஆதரிக்க வேண்டும். நாங்கள் நல்ல நிர்வாகம் செய்வோம். நடிகர்களால் நல்ல நிர்வாகத்தை அளிக்க முடியாது. தமிழகத்தின் தேவை நல்ல நிர்வாகியே. தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் நல்ல நிர்வாகியால்தான் தீர்வுகளைக் கொண்டுவர முடியும். நடிகரால் தீர்வைக் கொண்டுவர முடியாது'' என்றார் அன்புமணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT