Published : 02 Jan 2016 08:47 AM
Last Updated : 02 Jan 2016 08:47 AM

கரூர் மாவட்டம் வானகத்தில் நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி: நல்லகண்ணு, மகேந்திரன் பங்கேற்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட வானகத்தில் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் சுருமான்பட்டியில் உள்ள வானகத்தில் நம்மாழ்வாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நேற்று நடைபெற்ற 2-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு, வானகம் ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் ராஜா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

நம்மாழ்வார் நினைவிடத்தில் குத்துவிளக்கேற்றி, புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப் பினர் நல்லகண்ணு பேசும் போது, “விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றவேண் டும். ஏறத்தாழ 2 ஆயிரம் மரபணு விதைகளைக் கண்டுபிடித்தவர் நம்மாழ்வார். சீமைக் கருவேல மரங்கள், ஆகாயத் தாமரையால் விவசாயத்துக்கு ஏற்படும் தீமைகளை விளக்கி, இயற்கை வேளாண்மை குறித்து வாழ்நாள் முழுவதும் மக்களிடம் பிரச்சாரம் செய்தவர் நம்மாழ்வார்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், நம்மாழ்வா ரின் மனைவி, மகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x