Published : 10 Mar 2017 11:59 AM
Last Updated : 10 Mar 2017 11:59 AM

அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சியகத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்தவர் எம்.ராமன். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் 1982-ல் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். தேர்வு நிலை முதுநிலை உதவியாளராகப் பணிபுரிந்து 30.6.2013-ல் ஓய்வுபெற்றார். இவருக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழக ப்படவில்லை. இதனால் உயர் நீதிமன்ற கிளையில் ராமன் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மனுதாரருக்கு உரிய பணப்பலன்களை 6 சதவீத வட்டியுடன் வழங்க 20.11.2013-ல் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து போக்கு வரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, ஓய்வுபெற்றவர்களின் மூப்புப் பட்டியல் அடிப்படையில் விரைவில் ஓய்வூதிப் பணப்பலன்கள் வழங்க 24.7.2014-ல் உத்தரவிட்டது. அதன் பிறகும் ராமனுக்கு ஓய்வூதியப் பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.

இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளை நிர்வாகி ராஜேந்திரன் (ஓய்வு பெற்றுவிட்டார்) மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ராமன் மனு தாக்கல் செய்தார்.

இதேபோல் ராஜேந்திரன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நாகப்பட்டினம் தென்பாதையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நடத்துநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் மனு தாக்கல் செய்தார்.

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் போக்குவரத்து ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்.தனராஜ், உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டும் தனக்கு ஓய்வூதியப் பணப்பலன்கள் தராததால் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகி ஆறுமுகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் அனைத்தும் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவி ட்டிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிட்டார். நீதிமன்றம் உத்தரவிட்டும் ராஜேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் ஆஜ ராகவில்லை.

இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து, மார்ச் 20-ம் தேதிக்குள் கைது செய்து நீதிம ன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x