Published : 31 Dec 2013 12:00 PM
Last Updated : 31 Dec 2013 12:00 PM

மோடியோடு ஜோடி! - போட்டிபோடும் கொங்கு கட்சிகள்

கருமத்தம்பட்டியில் 2009-ல் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் நடத்திய மாநாடு அளவுக்கு இம்முறை எழுச்சி இல்லை என்று சொல்லப்பட்டாலும், கட்சி உடைந்த பிறகு அடுத்த 10 மாத காலத்துக்குள் இப்படியொரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரனுக்கு பெரும் வெற்றி என்று பெருமிதம் அடைகின்றனர் அக்கட்சித் தொண்டர்கள். இந்த மாநாடு அக்கட்சியினர் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பற்றி, கொ.ம.தே.க. மாவட்டச் செயலாளர்கள் பேசியதைக் கேட்ட ஈஸ்வரன், கூட்டணிக்கு ஒருபக்கம் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுச் சென்றுவிட்டதாகவே சொன்னார்.

அதிமுகவுடன் கூட்டணியில்லை

தாதுமணல் தொடங்கி 2ஜி வரை ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர், கோமாரி நோய்க்கு இழப்பீடு வழங்காதது தொடங்கி, மின்சாரப் பிரச்சினை, வறட்சி நிவாரணம் என கொங்கு மண்டலத்தின் விவசாயம், நெசவு சார்ந்த பல்வேறு மாநிலப் பிரச்சினைகளையும் தொட்டதால் இம்முறை அதிமுக அணியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என மாநாட்டு மேடையிலேயே பலரும் முணுமுணுக்கத் தொடங்கியதை கேட்க முடிந்தது.

இந்நிலையில், எப்படிபார்த் தாலும் மோடியோடு ஜோடி சேரு வார் என ஆருடங்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர் அவரது கட்சி யினர்.

ஜனவரியில் கூட்டணி குறித்து முடிவை பொதுக்குழு கூடி முடிவெடுக்க இருப்பதாக ஈஸ்வரன் சொன்னாலும், பா.ஜ.கவோடு கூட்டணி சேருவதையே விரும்பு வதாக சமிக்ஞை செய்கின்றனர் அவரது கட்சித் தொண்டர்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (கட்சி உடையாத நிலையில்) கொ.மு.க பரவலாக வாக்குகளை பெற்றிருந்தபோதிலும், விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த பிரச்சினைகளுக்கு கொ.ம.தே.க. மாநாட்டுத் தீர்மானம் முக்கியத்துவம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

80 முதல் 85 ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்துகொண்டதாக உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

இந் நிலையில், பெஸ்ட் ராமசாமி தரப்பில், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேசிய சமுதாயக் கூட்டமைப்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களை, ஈஸ்வரன் நடத்திய மாநாட்டு தினத்தன்று (டிச. 29-ல்) அறிமுகப்படுத்தியது, கொங்கு அரசியலில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பா.ஜ.கவுடன் கூட்டணி அமையும் வகையில், பெஸ்ட் ராமசாமி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திப் பேச, மொத்த கொங்கும் இங்கு இருக்கும்போது அங்கு வேட் பாளர்களை அறிவிக்கிறாராம் என ஈஸ்வரன் பதில் கொடுத்ததைப் பார்க் கும்போது பா.ஜ.க. கூட்டணியில் சேருவற்கு நீயா... நானா போட்டி கொங்கு கட்சிகள் மத்தியில் தொடங்கிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x