Last Updated : 19 Apr, 2014 10:34 AM

 

Published : 19 Apr 2014 10:34 AM
Last Updated : 19 Apr 2014 10:34 AM

டி.எம்.செல்வகணபதி இடத்துக்கு வருபவர் 2 ஆண்டு மட்டுமே எம்.பி.-யாக இருக்க முடியும்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி ராஜினாமா செய் துள்ள நிலையில், அந்த இடத்தை நிரப்பப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த இடத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவர், 2 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும்.

அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச் சர் செல்வகணபதி, கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் மாநிலங் களவை உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டார். இந்நிலையில், சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, அவர் தனது மாநிலங் களவை உறுப்பினர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியாகும் ஒரு உறுப்பினர் இடத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. இதில், அதிமுக சார்பில் 4 பேரும், அதிமுக ஆதர வுடன் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனும், திமுக சார்பில் கனிமொழியும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இதன்மூலம் மாநிலங் களவையில் அதிமுக பலம் 6-ல் இருந்து 10 ஆக அதிகரித்தது. திமுக பலம் 6-ல் இருந்து 5 ஆகக் குறைந்தது. தற்போது செல்வகணபதி ராஜினாமா செய்துள்ளதால் திமுக பலம் 4 ஆகக் குறைந்திருக்கிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சட்டப்பேரவைச் செயலக வட்டாரங் கள் வெள்ளிக்கிழமை தெரிவித்த தாவது:

திமுக உறுப்பினர் செல்வகணபதி யின் ராஜினாமா பற்றி மாநிலங்களவை டைரக்டர் ஜெனரல் அறிவிக்கை வெளியிடுவார். அதன்பிறகு தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளிவரும். தற்போதைய நிலவரப்படி, சட்ட மன்றத்தில் ஆளும்கட்சிக்கு அதிக பலம் உள்ளதால், அந்தக் கட்சிக்குதான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. செல்வகணபதியின் இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் என்பதால், புதிதாக பதவியேற்பவர் 2016 ஜூன் மாதம் வரை மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக இருக்க முடியும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய நிலவரப்படி, சட்ட மன்றத்தில் ஆளும்கட்சிக்கு அதிக பலம் உள்ளதால், அந்தக் கட்சிக்குதான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x