Last Updated : 29 Jun, 2016 10:06 AM

 

Published : 29 Jun 2016 10:06 AM
Last Updated : 29 Jun 2016 10:06 AM

அன்பு இல்லமாக மாறிய ஆதரவற்றோர் இல்லம்!

உணவளிப்போருக்கு அன்பளிப்பு கொடுக்கும் ஆதரவற்ற முதியவர்கள்

வீட்டு விசேஷங்களில் ஆடம்பர செலவைக் குறைத்து ஆதரவற்றோருக்கு உணவளிப்பவர்களைப் பார்த்திருப்போம். ஆனால், உணவு கொடுத்து உதவுபவர்களுக்கு, அன்பளிப்பு கொடுத்து வழியனுப்பும் ஆதரவற்றவர்களைப் பார்த்திருக்கிறோமா?

ஆம், ஒருவேளை உணவை மனமுவந்து பாசத்தோடு கொடுக்கும் உள்ளங்களுக்கு, கோவை மாநகராட்சி காப்பகத்தில் தங்கியிருக்கும் ஆதரவில்லாத முதியவர்கள் தாங்களே வளர்த்த மரக் கன்றுகளையும், தாங்களே உருவாக்கிய மெழுகுவர்த்திகளையும் அன்பளிப்பாக கொடுத்து வாழ்த்தி அனுப்புகின்றனர். இதற்காகவே இயற்கை முறையில் சிறிய அளவில் விவசாயமும் செய்கின்றனர் இந்த ஆதரவற்ற முதியோர்கள்.

மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, ஆதரவற்று தனித்து விடப் படும் முதியோர்களின் எண்ணிக் கையும் நாளுக்குநாள் கூடிக் கொண்டே போகிறது. நவீன வாழ்க்கை முறையால், உறவு களால் கைவிடப்பட்டு வீதிக்கு வரும் முதியோர்கள் பலரும், பேருந்து நிலையம், ரயில் நிலையம், சாலையோர நடைபாதைகளில் தங்களது எஞ்சிய வாழ்க்கையை கடத்துகின்றனர். உணவு, பராமரிப்பு இல்லாமல், நோய்வாய்ப்பட்டு பலர் இறப்பையும் சந்திக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்படும் முதியோர் களின் நிலைமையும் இதுபோன்று தான் இருக்கிறது.

அப்படி ஆதரவற்ற நிலையில் விடப்படுபவர்களை மீட்டு சிகிச்சை அளித்து, பாதுகாக்கும் முயற்சியில் ஈரநெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியுள்ள 60 வயதைக் கடந்த சுமார் 35 பேரை இவ்வமைப்பு பராமரித்து வருகிறது.

மாநகராட்சியில் இருந்தும், மற்ற பகுதிகளில் இருந்தும் கிடைக்கும் உதவிகளால் இங்குள்ளவர்கள் உடல்நலத்தோடு, மன நலத்தோ டும் வாழ்க்கையை புதுப்பித் துக் கொண்டு வாழத் தொடங்கி யுள்ளனர். வழக்கமான காப்பகங் களைப் போல இல்லாமல், இங்கு மன இறுக்கத்தைக் குறைக்க பல்வேறு பயிற்சிகள் கொடுக் கப்படுகின்றன. இயற்கை வேளாண்மை, இயற்கை உரம் தயா ரிப்பு, பாக்கு மட்டை உணவுத் தட்டு தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அதில் குறிப்பிடத்தக்கவை.

அதிலும் குறிப்பாக, விளை விக்கும் காய்கறிகளை உணவுக் குப் பயன்படுத்திக் கொண்டு, தாங்களே தயாரிக்கும் மெழுகு வர்த்திகளையும், பயிரிட்டு வளர்க் கும் காய்கறிச் செடிகளையும் உண வளிக்க வருவோருக்கு அன்பளிப் பாக வழங்குகின்றனர் காப்பகத்தில் தங்கியிருக்கும் ஈரநெஞ்சங்கள்.

இங்கு தங்கியுள்ள மனோவா என்பவர் கூறும்போது, ‘ஆதரவற்ற வர்கள் என்பதால் ஏராளமானோர் உணவளிக்க வருகிறார்கள். அவர் களுக்கும் நாம் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை தொடங்கினோம். எங்களுக்கு உணவளிப்பவர்கள், எங்களுடனேயே இருந்து உண்ண வேண்டும் என்பதற்காக பாக்கு மட்டையில் உணவு உண்ணும் தட்டுகளை தயாரிக்கிறோம்.

அவர்களும் இயற்கை உணவை உண்ண வேண்டும் என்பதால், விதை விதைத்து, பதியமிட்டு காய் கறிச் செடிகளை வளர்த்து அவர் களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கி றோம். யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழும் எங்களுக்கு, அறிமுகமில்லாத பலர் உதவி செய்து வருகிறார்கள். அவர் களுக்கு எங்களால் முடிந்த அள வுக்கு ஏதாவது செய்து கொடுக்கி றோம். இதனால் எங்களுக்கும் மனநிறைவாக உள்ளது’ என்கிறார்.

ஈரநெஞ்சம் அமைப்பைச் சேர்ந்த பி.மகேந்திரன் கூறும்போது, ‘ஆதரவற்ற, மனநலம் பாதித்த சுமார் 300 பேரை குடும்பங்களுடன் சேர்த்து வைத்துள்ளோம். அடுத்த மைல்கல்லாக இந்த காப்பகத்தை பராமரிக்கும் பொறுப்பு கிடைத்தது. காப்பகம் தொடங்கியபோதே, இந்த காய்கறித் தோட்டத்தையும் உருவாக்கிவிட்டோம்.

ஆதரவின்றி தனித்து விடப்பட்ட வர்களுக்கு, காப்பகங்கள் மூலம் வீட்டுச்சூழலை உருவாக்கித் தந்து விட முடியாது. எனவே யோகா, நடைப்பயிற்சி ஆகியவற்றோடு மன இறுக்கத்தைக் குறைக்க இயற்கை வேளாண்மையை ஊக்கு விக்கிறோம். வயதில் மூத்தவர்கள் செடி கொடிகளை, பெற்ற குழந் தைகளைப் போல பாதுகாத்து இயற்கை உரமிட்டு வளர்க்கிறார் கள்.

தங்களின் உழைப்பால் விளைந்த காய்கறிகளில் உணவு உண்ணும் போது, எல்லையில்லா மகிழ்ச்சியையும், எதையோ சாதித்து விட்ட உணர்வையும் அடைகிறார் கள். அவற்றை, உணவளிக்க வரு பவர்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்து அனைவரையும் மகிழ்ச் சிக்கு உள்ளாக்குகிறார்கள். இயற்கை வேளாண்மைக்கு ஜோதி கிருஷ்ணன் என்பவர் ஆலோசனை களை வழங்கி வருகிறார்’ என்றார்.

‘எங்களுக்கு என்றுமே வயது 16 தான், மீதமுள்ள வயதெல்லாம் அனுபவங்கள்’ எனக் கூறிக் கொண்டு ஒரே குடும்பம் போல் மகிழும் இந்த முதியவர்கள், ஆதர வற்றோர் இல்லத்தை படிப்படியாக அன்பு இல்லமாக மாற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x