Published : 25 Jun 2016 09:03 AM
Last Updated : 25 Jun 2016 09:03 AM

பாஜகவுடனான நட்பை பயன்படுத்தி புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக்குவேன்: மாநில முதல்வர் நாராயணசாமி உறுதி

பாஜகவுடனான நட்பை பயன் படுத்தி புதுச்சேரியை முன் மாதிரி மாநிலமாக்குவேன் என அம்மாநில முதல்வர் வி.நாரா யணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று அவர் வருகை தந்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது:

திமுக ஆதரவுடன் புதுச்சேரி யில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் என்னை முதல்வராக அறிவித்தனர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் டெல்லிக்கு சென்று சோனியா காந்தியை சந்தித்தோம். புதுச் சேரியில் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்படவும், கட்சியை வளர்க்கவும் அவர் அறிவுரைகளை வழங்கினார். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு. தமிழக - புதுச்சேரி காங்கிர ஸார் எப்போதும் நட்பாக இருப் பார்கள். அந்த அடிப்படையில் தமிழக அலுவலகத்துக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்வராக பொறுப்பேற்ற தும் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட மத்திய அமைச்சர் களை சந்தித்து புதுச்சேரிக்கான நிலுவைத் திட்டங்களை செயல்படுத்தவும், அதிக நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்தோம்.

மற்ற மாநிலங்களைப் போல புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், திட்டமிடாத செலவுகளுக்கான நிதி ஒதுக் கீட்டை ரூ.600 கோடியில் இருந்து ரூ.1,200 கோடியாக அதிகரிக்க வேண்டும், புதுச்சேரி யில் விமான போக்குவரத்தைத் தொடங்க வேண்டும், காரைக் காலில் மினி விமான நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

நான் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்ததால் பாஜக தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளது. இந்த நட்பை பயன்படுத்தி புதுச்சேரியை முன்மாதிரி மாநிலமாக்குவேன்.

வளர்ச்சிக்கு பாடுபடுவோம்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதன்படி ஆளுநர் கிரண்பேடி செயல்படுகிறார். அவர் தன்னிச்சையாக செயல் படுகிறார் என்பது தவறானது. ஆளுநருடன் இணைந்து புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்.

நான் எம்எல்ஏவாக இல்லாத தால் 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும். எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். உரிய நேரத்தில் அதனை அறிவிப்போம்.

கச்சத் தீவு யாரால் தாரை வார்க்கப்பட்டது என்ற விவாதம் இப்போது தேவையற்றது. எந்தச் சூழலில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அதனை இலங் கைக்கு வழங்கினார் என்பது தெரியாது. எனவே, கச்சத் தீவை மீட்பது குறித்து மத்திய அரசும், பிரதமர் மோடியும்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x