Published : 24 Jul 2016 10:19 AM
Last Updated : 24 Jul 2016 10:19 AM

காவிரி நீர் பிரச்சினை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகாததற்கு விவசாய சங்கம் கண்டனம்

காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக் கறிஞர்கள் ஆஜராகாததற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ ரின் வாதத்தை ஏற்று காவிரி வழக்குகளை அக்டோபர் மாதம் 18-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த விசா ரணையின்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜரா கவில்லை என்ற தகவல், தமிழக காவிரி விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து காவிரி வழக்கு காலம் கடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகாமல் இருப்பதில் சந்தேகம் எழுந்துள் ளது. கடந்த 5 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் தராத கர்நாடகம், அங்கு மழை அதி கரித்து அணைகள் நிரம்பினால், அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீரை மட்டுமே தந்து கொண்டிருக்கிறது. இதையே நடைமுறையாகவும் பின்பற்றத் தொடங்கிவிட்டது.

கர்நாடக அணை களில் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஜூன்- ஜூலை மாதத்தில் தர வேண்டிய 44 டிஎம்சி தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. இதை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டிய தமிழக அரசின் வழக்கறிஞர்கள், வழக்கில் ஆஜ ராகாதது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக் கிறோம். வழக்கறிஞர்களின் இந்த அலட்சியத்தால், இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டு, சாகுபடி செய்ய முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக முதல் வர் உரிய விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக தண்ணீர் பெறுவதற்கு அவசரகால நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய பங்கீட்டுக் குழுவும் அமைக் கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்தும் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசு வழக்கறிஞர்களின் அலட்சியத்தால், இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டு, சாகுபடி செய்ய முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x