Published : 25 Jun 2016 08:57 AM
Last Updated : 25 Jun 2016 08:57 AM

ஓசூர் தலைமை காவலர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சென்னையில் சிக்கினார்

ஓசூரில் தலைமைக் காவலரை கொலை செய்த வழக்கில் தலை மறைவாக இருந்த முக்கிய குற்ற வாளியை சென்னையில் போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 15-ம் தேதி நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது, தலைமை காவலர் முனுசாமி கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். எஸ்ஐ நாகராஜ், தலைமை காவலர் தனபால் ஆகி யோர் படுகாயம் அடைந்தனர்.

இதில், எஸ்ஐ நாகராஜ், கோவை தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகி றார். மேலும், இச்சம்பவத்தில் பிடிபட்ட பெங்களூரு மாவட்டம் கே.ஆர்.புரா அருகே உள்ள ஜி.எம்.பாளையத்தை சேர்ந்த மூர்த்தி(எ)புஜ்ஜி(19), கடந்த 16-ம் தேதி அதி காலை உடல்நலக்குறைவால் உயி ரிழந்தார். மேலும், இவ்வழக்கில் தலைமறைவான முஜி(எ)முஜமில்(21), விக்னேஷ் (எ)விக்கி (22), அமரா (24) ஆகிய 3 பேரையும் போலீஸார் தேடி வந்த னர். இதற்காக எஸ்பி கங்காதர் தலை மையில் அமைக்கப்பட்ட 8 தனிப் படைகள் வடமாநிலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் முஜமில், விக்னேஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் சரண் அடைய செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு வந்தனர். உரிய ஆவணங்கள் இல் லாமல் சரணடைவதில் தாமதம் ஏற்படவே, போலீஸார் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.

தேடுதல் வேட்டை

இந்நிலையில், அமரா சென்னையில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, தனிப் படை போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்ததாக தகவல் வெளி யாகி உள்ளது.

மேலும், தலை மறைவாக உள்ள மற்ற 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென் னையில் அமரா சிக்கியதாக வெளி யாகியுள்ள தகவலை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x