Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை யின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில் களில் பணியாற்றும் பூசாரிகளின் வயதையும், தற்போது நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, அவர்களது மாத ஓய்வூதியத்தொகையை ரூ.750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணை யிட்டுள்ளார்.

திருக்கோயில்களில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து 60 வயதை நிறைவு செய்து ஓய்வு பெற்ற கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியமாக தற்போது ரூ.750 வழங்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களுக்கு வழங் கப்பட்டு வரும் மானியத்தொகை ரூ.1 கோடியை ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்க வும் முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

புகழ் வாய்ந்த பழைய பண்பாட்டுப் பாரம்பரியத்தின் பொக்கிஷங்களாக விளங்குவது திருக்கோயில்கள்.

அவற்றை புனர மைத்தல், குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு உணவு அளித்தல், அடிப்படை வசதிகளை செய்தல் போன்ற பணிகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 1956ஆம் ஆண்டு தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டது. அதன் பின்னர், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், ஆகிய இடங்களில் உள்ள இணைக் கப்பட்ட மற்றும் இணைக்கப்

படாத 490 திருக்கோயில்கள், ஒரு மகளிர் கல்லூரி, இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு ஆரம்பப் பள்ளி ஆகியவற்றை நிர்வகிக்க, கன்னியாகுமரி தேவஸ்வம் போர்டு ஏற்படுத்தப்பட்டது.

ரூ.3 கோடி

இவற்றில் ஒரு சில கோயில் களில் மட்டுமே ஓரளவு வருமானம் வருகிறது. திருக்கோயில்களின் நிர்வாகம், தினசரி பூஜைகள், திருவிழா செலவுகள், பராமரிப்பு, திருப்பணி செலவுகள், பணியாளர் சம்பளம் ஆகியவை ஒரு சில கோயில்களிலிருந்து வரும் வருமானம் மற்றும் அரசால் வழங்கப்படும் ரூ.1 கோடி மானியம் ஆகியவற்றைக் கொண்டு நடைபெறுகின்றன.

ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செலவினங் களால், இத்திருக்கோயில்களை நிர்வகிப்பதில் நிதி இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

இதை கருத்தில் கொண்டு, தற்போது வழங்கப்படும் மானியத் தொகையான ரூ.1 கோடியை ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x