Published : 16 Mar 2017 08:07 AM
Last Updated : 16 Mar 2017 08:07 AM

கோயம்பேடு சந்தையில் 480 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.1 லட்சம் காய்கறிகள், பழங்கள் பறிமுதல்

கோயம்பேடு சந்தையில் பூ, பழம், காய்கறி கடைகள் என மொத்தம் 3 ஆயிரத்து 157 கடை கள் இயங்கி வருகின்றன. தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சந்தையில் பொதுமக்கள் வந்து செல்வதற்கான நடைபாதை கள், வாகனங்களை நிறுத்து மிடங்கள் ஆகியவற்றை சாலை யோர வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பல்வேறு இடையூறு கள் ஏற்படுதாக மார்க்கெட் நிர்வாகக் குழு தலைமை நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அதி காரிகள் நேற்று ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 480 கடைகள் அகற்றப்பட்டன. அக்கடைகளில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கப்பட்டன. சாலையோரம் வைக்கப்பட்ட பெட்டிக் கடைகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x