Published : 22 Mar 2017 08:56 AM
Last Updated : 22 Mar 2017 08:56 AM

ஃபெரா வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்ட டிடிவி தினகரனின் வேட்புமனுவை ஏற்க தடை விதிக்க கோரி வழக்கு

அந்நிய செலாவணி மோசடி (ஃபெரா) வழக்கில் ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்ட டிடிவி.தினகரனின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி அரும் பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந் நிலையில் அவர் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் டிடிவி.தினகரனின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது எனக்கோரி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறி யிருப்பதாவது:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட் பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் தின் பிரிவு 8(1) (சி) மற்றும் பிரிவு 8(1)(இ) ஆகிய பிரிவு கள் சட்டவிரோதமானது; அரசியல மைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். ஏனெ னில் இந்த சட்டப் பிரிவுகள், சுங்கத்துறை சட்டம் 1962 மற்றும் அந்நிய செலாவணி சட்டம் 1973-ன் படி ஒருவருக்கு சிறை தண் டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட தடை செய்கிறது. இந்த சட்டப் பிரிவு களின் கீழ் குற்றவியல் நடவடிக்கை களுக்காக விதிக்கப்படும் சிறை தண்டனையையும், துறை ரீதியாக விதிக்கப்படும் அபராதத் தையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. ஒரு குற்ற வழக்கில் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டாலே அவரும் குற்ற வாளிதான். எனவே இந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஷரத்துக்குள் கொண்டுவந்து அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட நபர்களையும் தேர்தலில் போட்டி யிட தடை விதிக்க வேண்டும்.

தற்போது ஆர்.கே.நகர் தொகு தியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் டிடிவி.தினகரன் மீதும் இதே குற்றச்சாட்டு உள்ளது. அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதத் தொகை சரியானதுதான் என உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இருந்து டிடிவி.தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே இந்த சூழலில் டிடிவி.தினகரனின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x