Last Updated : 01 Feb, 2017 09:16 AM

 

Published : 01 Feb 2017 09:16 AM
Last Updated : 01 Feb 2017 09:16 AM

உள்நாட்டு மரங்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் காவல் ஆய்வாளர்: 6 ஆண்டுகளில் 22,315 மரக்கன்றுகள் அன்பளிப்பு

வார்தா புயலின்போது தமிழகத்தில் லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். அதன் பிறகே உள்நாட்டு மரங்களின் மீதான விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்ச மாக துளிர்விடத் தொடங்கியுள்ளது. ஆனால், கோவையில் உள்ள போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஒருவர், ஆயிரக்கணக்கான உள் நாட்டு மரக் கன்றுகளை வளர்த்து, மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கி,

சூழல் பாதுகாப்புக்காக பாடுபட்டு வருகிறார்.

மதுரை மாவட்டம் கருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.அய்யர் சாமி. 33 வருடங்களாக காவல் துறையில் பணியாற்றுகிறார். தற் போது கோவை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (கிழக்கு) ஆய் வாளராக உள்ளார். கடந்த 6 வரு டங்களில் 22,315 மரக்கன்றுகளை வளர்த்து மக்களுக்கு இலவசமாக வழங்கி உதவியுள்ளார். மரங்களே மண்ணின் பெருமையை நிலைக்க வைக்கும் என்பதால் மரக்கன்றுக ளுக்கு முழுக்க முழுக்க இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார்.

‘தி இந்து’விடம் அவர் கூறும் போது, ‘‘இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும். நம்மைச் சுற்றி இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப் போதும் எனக்கு உண்டு. அடிப்படை யில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். போலீஸ் வேலையில் இருந்தாலும், சரியாக நேரத்தை ஒதுக்கினால் மரங்களை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

2009-ல் காவல்துறை நண்பர்க ளுடன் இணைந்து ‘காவலர் காக்கும் கரங்கள்’ என்ற அமைப்பாக சமூக சேவையைத் தொடங்கினோம். சுமார் 100 பேர் கொண்ட அந்த குழுவில், அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதி கொடுத்து, ஆதரவற்றவர்களுக்கு உதவி வந்தோம். அவர்களுக்கு உணவு, உடை, கல்வி உபகரணங்கள் உள் ளிட்டவற்றைக் கொடுத்தோம். இந்த நிலையில்தான், 2011-ம் ஆண்டு மரக்கன்றுகளை வளர்த்து மக்களுக்கு கொடுத்து, அவர்களிடமே பராமரிப்பில் விடலாம் என திட்டமிட்டோம்.

கோவை மாநகரக் காவல்துறை ஒத்துழைப்புடன், காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனியே நர்சரி அமைத்தோம். சேவை மனப் பான்மை உள்ள 50 பேரைக் கொண்டு இப்பணியை தொடங்கினோம். கோவை தடாகம் பகுதியில் இருந்து வளமான செம்மண், தரமான விதை, பைகள், இயற்கை உரம் அனைத்தையும் வாங்கி, நர்சரியில் மரக்கன்றுகளை வளர்க் கத் தொடங்கினோம். வேம்பு, பூவரசு, புங்கை, யானைக்குன்று, பலா, நாவல், புளி என உள்நாட்டு மரங்களையே வளர்க்கிறோம்.

மரக்கன்றுகளை மக்களிடம் கொடுத்து, அவர்கள் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறோம். அந்த வகையில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளோம். அன்பளிப்பாக மரக்கன்றுகள் வழங்குவோர் அதிகமாக உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. ஆனால், மரம் நடுவதை விளம்பரமாக வைத்துக்கொண்டு பராமரிக்காமல் விடுவது பாவம். உயிரைக் கொல் வதற்கு சமம்.

புள்ளிவிவரப்படி பார்த்தால், தமி ழகத்தில் இதுவரை சுமார் 5 கோடி மரங்கள் நடப்பட்டி ருக்கின்றன. சரியாக அனைத்தும் பராமரிக்கப் பட்டு வளர்க்கப்பட்டிருந்தால் இன்று மாநிலமே மரங்களால் நிறைந் திருக்கும். எனவே பராமரிப்பு அவசி யம். அதை உறுதி செய்த பிறகே மரக்கன்றுகளை வழங்குகிறோம். கோவையில் அரசு, தனியார் கல் லூரிகள், பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள் என ஏராள மான இடங்களில் நாங்கள் வளர்த் தெடுத்த மரக்கன்றுகள் இன்று பெருமரங்களாக உயர்ந்து நிற்கின்றன. அவை அனைத்தும் எங்கள் உழைப்பின் அடையாளம்’’ என்றார்.

ஆதரவற்றோருக்கும் உதவி

மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் கூறும்போது, ‘‘போக்குவரத்து ஆய்வாளர் அய்யர்சாமி, மரக்கன்றுகள் வளர்ப்பது மட்டுமல்ல, ஆதரவற்ற குழந்தை களுக்கும் ஏராளமான உதவிகளை யும் செய்து வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள காப்பகங்களில் தங்கிப் படிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல்துறை சார்பில் விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்படு கின்றன. இவர் தலைமையிலான குழுவே முன் முயற்சி எடுத்து ஒவ்வோர் ஆண்டும் அந்தப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x