Published : 10 Jun 2017 09:24 AM
Last Updated : 10 Jun 2017 09:24 AM

மாத்திரைகள், பால் பவுடர் டின்களில் மறைத்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி ஹெராயின் பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் தென்ஆப்பிரிக்கர் கைது

மாத்திரைகள், பால் பவுடர் டின்களில் மறைத்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. சர்வதேச போதைக் கடத்தல் கும் பலைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்க நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமா னம் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் அதிக அளவில் போதைப் பொருட் கள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, விமானத்தில் பயணம் செய்ய இருந்த 256 பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜோகன் (42) என்பவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்துவிட்டு, அபுதாபிக்குச் செல்ல இருப்பது தெரிந்தது. அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை தீவிரமாக சோதனை செய்தனர். ஒரு உறையில் ஏராளமான மாத்திரைகள், பால் பவுடர் டின்கள் இருந்தன. சத்து மாத்திரைகள், தரமான பால் பவுடர் என்பதால் இந்தியாவில் இருந்து வாங்கிச் செல்வதாகக் கூறினார்.

சந்தேகத்தின்பேரில் மாத்திரை களை சோதனை செய்தபோது, அவை அனைத்தும் ஹெராயின் போதைப் பொருள் என்பது தெரிந் தது. பால் டின்களில் பால் பவு டருக்கு கீழே ஹெராயின் போதைப் பொருள் நிரப்பப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத் தம் 12 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி. இதையடுத்து, ஜோகனை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர். போதை பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கெனவே 2 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபத் தில்தான் வெளியே வந்துள்ளார். மீண்டும் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு சிக்கியிருக்கிறார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருளில் கோக்கைன், கேட்டமைன் போன்ற போதைப் பொருட்களும் கலந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால், கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை மேலும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x