Published : 20 Sep 2018 10:17 AM
Last Updated : 20 Sep 2018 10:17 AM

உள்ளாட்சி அமைப்புகளில் அம்மா மக்கள் சேவை மையம் முடக்கம்

அம்மா மக்கள் சேவை மையம் உள்ளாட்சி அமைப்புகளில் முடக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குடிநீர், கழிவுநீர் தேக்கம், தெரு மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்களை அரசுத் துறையினருக்கு தெரிவித்து வருகின்றனர். மேலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வர்த்தக உரிமம், பாதாள சாக்கடைக் குழாய் இணைப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்குச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசின் சேவைகளுக்கும் அவர்கள் அரசுத்துறையினரை நாடுகின்றனர். இதற்காக ‘அம்மா மக்கள் சேவை மையம்’ என்ற அமைப்பு தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ், கடந்த, 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 8-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த மையங்களில் புதன்கிழமைதோறும், அந்தந்த பகுதி மக்கள் தங்கள் புகார்களை, மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் உதவி ஆணையர்கள், நகராட்சி ஆணையர் கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோரிடம் கோரிக்கை மனுவாக அளிக் கலாம். இம்மனுக்கள் மீது ஒரு வாரத்துக் குள் நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து தீர்வு காணப்படும் என, அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விண்ணப்பங்களையும் கணினியில் பதிவு செய்து, ஒவ்வொரு கோரிக்கை மனுவுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பதில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி அம்மா மக்கள் சேவை மையம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தனி அலுவலகமாக திறக்கப் பட்டது. ஆனால் தற்போது இந்த அம்மா மக்கள் சேவை மையங்கள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் தங் களது குறைகளை உள்ளாட்சி நிர்வாகங் களில் நேரில் தெரிவிக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. கார்கள் தீர்க்கப்படாமலும், புகார்களின் நிலை குறித்த தகவல் இன்றியும் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அம்மா மக்கள் சேவை மையங்கள் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலரான மருத்துவர் அக்பர் கூறியதாவது: அரசு சேவை தாமத மின்றி பொதுமக்களுக்கு கிடைக்க ‘அம்மா மக்கள் சேவை மையம்' தொடங்கப்பட்டது. சில வாரங்கள் மட்டுமே செயல்பட்ட இந்த சேவை மையம், அதிகாரிகளின் அலட்சியத் தால் தற்போது முற்றிலும் முடங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் மண்டல அலுவலகத்தின் உதவி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட எந்த அதிகாரிகளும் புதன்கிழமைகளில் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவது இல்லை. எந்த அறிவிப்பும் செய்வது இல்லை. இதனால், பிறப்பு, இறப்பு சான்றிதழ், தொழில் உரிமம், கட்டட அனுமதி, பெயர் மாற்றம் உள்ளிட்ட இனங்களில் விண்ணப்பிக்கும் பொதுமக்கள் மாதக் கணக்கில் அலைய வேண்டியுள்ளது. தற்போது உள்ளாட்சி பிரநிதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. இதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x