Published : 23 Sep 2018 04:14 PM
Last Updated : 23 Sep 2018 04:14 PM

ஹை-டெக்காக மாறும் புழல் சிறையின் பாதுகாப்பு: சாப்ட்வேர் மூலம் பராமரிக்க, கட்டுப்படுத்த முடிவு

சென்னையில் உள்ள புழல் சிறை ஹெ- டெக்காக மாற்றப்பட உள்ளது. சாப்ட்வேர் மூலம் அனைத்துக் கதவுகளும் பராமரிக்கப்பட்டு, கட்டுப்படுப்பட உள்ளது.

புழல்சிறை வளாகத்தில் முதல் முறையாக இந்த சாப்ட்வேர் முறையில் கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்பின் மற்ற சிறைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்குச் சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து புழல், கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைகளில் போலீஸார் சமீபத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

உயர் மட்ட பாதுகாப்புப் பிரிவில் இருக்கும் கைதிகளின் அறைகளில் இருந்து 2 டிவிக்கள், இரண்டு மூட்டை பிரியாணி அரிசி, வாசனைத் திரவியங்கள், ஆன்ட்ராய்ட் செல்போன், எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றும் சமையல் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து புழல் சிறையில் பாதுகாப்பை பலப்படுத்தச் சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக புழல்சிறையின் பாதுகாப்பை படிப்படியாக ஹெ-டெக் முறையில் மாற்றச் சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெக்கானிக்கல் மற்றும் மின்னணு(மெக்கட்ரானிக்) முறையில் சிறையின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட உள்ளது. சிறையில் உள்ள கதவுகள் அனைத்தும் மென்பொருள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, நிர்வாகம் செய்யப்படும்.

சிறையில் உள்ள அனைத்துக் கதவுகளுக்கும் மின்னணு லாக் மற்றும் திறக்கும் பாஸ்வேர்டு வழங்கப்படும் இவை அனைத்தும் ஒரு டேட்டாபேஸ் மூலம் கட்டுப்படுத்தப்படும். இந்த மின்னணு லாக் மூலம் நாம் சிறையின் கதவுகளைத் திறக்கவும், மூடவும் முடியும். சிறை மேலாண்மையாளர் அனுமதி கொடுத்தால் மட்டுமே சிறைவளாகத்துக்குள் செல்ல முடியும். அனைத்தும் சாப்ட்வேர் புரோகிராம் மூலம் நிர்வகிக்கப்பட உள்ளது.

இந்த புதிய பாதுகாப்பு முறையின் மூலம் சிறைக்குத் தொடர்பில்லாதவர்கள் யாரும் சிறைவளாகத்துக்குள் வர முடியாது, கதவுகளைத் திறக்கும் பாஸ்வேர்டுகளையும் தவறாகப் பயன்படுத்த முடியாது. சிறையில் உள்ள காவலர்கள், அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் பாஸ்வோர்ட், கீஸ்கள் அனைத்தும் மென்பொருள் மூலம் கட்டப்படுத்தப்படும்.

இதற்கான பிரத்தியேகமாக புரோகிராம் செய்யப்பட்ட 420 ஹார்ட்வேர் பேட்லாக்குகளுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. புரோகிராம் செய்யப்பட்ட 12 மின்னணு சாவிகள், 3 இன்ட்டர்பேஸ் கருவிகள், 3 டவர் சர்வர் சிஸ்டம், மென்பொருள் ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள சர்வரில் உள்ள நினைவகத்தில் முறைப்படி அனைத்து லாக்குகளும், கீவேர்டுகளும் பதிவேற்றம் செய்யப்படும். சிறையியன் கண்காணிப்பாளர் மென்பொருளில் இருந்து தேவையான விவரங்களைப் பெற்று, சிறையை நிர்வகிக்க முடியும், புதிதாகக் காவலர்களையும், அதிகாரிகளையும் சேர்க்க முடியும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x