Published : 09 Sep 2018 08:12 AM
Last Updated : 09 Sep 2018 08:12 AM

கல்லூரியில் பாலியல் புகார்களை விசாரிக்க முதல்வர்கள் தலைமையில் குழு: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் 

கல்லூரிகளில் பாலியல் தொடர் பான புகார்களை விசாரிக்க அக் கல்லூரிகளின் முதல்வர்கள் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங் மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தொடர்ந்து வருகின்றன. கல்லூரி பேராசிரியை பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், வேளாண் கல்லூரி மாணவி ஒருவரும் பேராசிரியர் மீது புகார் அளித்தார். தொடர்ந்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாரில் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கல்லூரிகளில் ராகிங் மற்றும் பாலியல் புகார்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலை மையில் நடந்த இக்கூட்டத்தில், உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள் துறை செயலர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: கல்லூரிகளில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு வெளியில் நடக்கும் சம்பவங்களில் காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல் லூரிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, எப்படி ஆன்டி - ராகிங் குழு இருக்கிறதோ அதேபோல், கல் லூரிகளின் முதல்வர்கள் தலை மையில் குழு அமைக்கப்பட் டுள்ளது. அதில் புகார் அளித்தால் விசாரணை நடத்தப்பட்டு சம்பந் தப்பட்டவர்களுக்கு தண்டணை அளிக்கப்பட்டு வருகிறது. அது போன்ற நிகழ்வுகள் தற்போது அதிகமாக நிகழ்வதால் காவல் துறை மூலம் வழக்குப் பதியப் பட்டு, சம்பவம் நடந்தது உண்மை யாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் தலைமையில் அளிக்கப்பட்ட குழுவிலும் புகார் தெரிவிக்கலாம். 1073, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் மாணவ, மாணவியர் புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x