Published : 15 Jun 2019 08:35 AM
Last Updated : 15 Jun 2019 08:35 AM

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவது குறித்து முதல்வர் ஆய்வு

``கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைவது தொடர்பாக, முதல்வர் ஆய்வு செய்து வரு கிறார். பொதுமக்களுக்கு இடை யூறான எந்த செயலையும் அதிமுக அரசு செய்யாது” என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். கோவில்பட்டியில் தமிழக சுற்றுச் சூழல் துறை சார்பில் மாநில அள விலான சுற்றுச்சூழல் தின விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள தொழிற்பேட் டைகளில் இயங்கும் தொழிற் சாலைகளில் இருந்து கரும்புகை வெளியேறாத வகையில், அதனை தண்ணீர் மூலம் வடிகட்டி வெளி யேற்றப்படுகிறது. பெரிய தொழிற் சாலைகளில் காற்றுத் திறன்மாணி கருவிகள் பொருத்தப்பட்டு, அவை சென்னையில் உள்ள மாசு கட்டுப் பாட்டு வாரிய தலைமை அலுவலகத் துடன் ஆன்லைனில் இணைக் கப்பட்டுள்ளன.அதுபோல, சாயப் பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘பொதுமக்களுக்கு பாதிப்பில்லை’

கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிகோல் கள் சேகரிப்பு மையத்தை, பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கூடங்குளம் அணுஉலை வளாக இயக்குநர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அணு உலையில் பயன்படுத்தப்பட்டு வெளியே எடுக்கப்படும் எரிகோல்கள் இருமுறைகளில் சேமிக்கப்படுகிறது. அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிப்பது ஒருமுறை. தற்போது கூடங்குளத்தில் இப்படித்தான் சேமிக்கப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணு உலை வளாகத்துக்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படுவது மற்றொரு முறை. இது, ‘Away From Reactor’ (AFR) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, மும்பை அருகே தாராபூரிலும், ராஜஸ்தானில் ராவல்பட்டாவிலும் ஏஎப்ஆர் முறையிலான சேமிப்பு மையம் உள்ளது. மேலும் ஒரு மையம் ராவல்பட்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது.

அத்தகைய ஏஎப்ஆர் மையங்களை கூடங்குளம் முதல் மற்றும் 2-வது அணுஉலை வளாகத்தில் அமைக்க திட்டமிடப் பட்டிருக்கிறது. அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றி, உயர் தொழில்நுட்பத்துடன், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இந்த ஏஎப்ஆர் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அணுஉலைக்கு வெளியே இதற்காக எந்த இடத்தையும் தேர்வு செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x