Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

காஞ்சி, திருவள்ளூரில் கம்யூனிஸ்ட்கள் உண்ணாவிரதம்: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நடந்தது

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் நடந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

ரயில் கட்டணம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, பாதுகாப்புத் துறை மற்றும் காப்பீட்டுத் துறையில் 49 சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, தமிழகத்தில் மணல் கொள்ளை, அரசுப் பள்ளிகள் மூடல் உள்ளிட்ட மக்கள் விரோத கொள்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி வருவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதைக் கண்டித்து இருகட்சிகளும் இணைந்து தமிழகம் முழுவதும் ஒரு வார காலம் பிரச்சார இயக்கம் நடத்தின. நிறைவாக திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

டி.கே.ரங்கராஜன் எம்பி

காஞ்சிபுரத்தில் நடந்த போராட் டத்துக்கு இரு கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மோகனன், ராமதாஸ் தலைமை தாங்கினர். இதில் சிறப்புரையாற்றிய மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. பேசும்போது, ‘ரயில்வே துறையில் போதுமான இன்ஜின்கள், பெட்டிகள் இருப்பு இல்லாத நிலையில் புதிய ரயில்கள் இயக்கப்போவதாக அறிவித்துள்ளது புதிராக உள்ளது. வெறும் வார்த்தை ஜாலங்களாக பட்ஜெட் உள்ளது.

தமிழகத்தில் எதிர்கட்சி இல்லை என ஜனநாயகத்துக்கு புறம்பாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். சட்டசபையில் தினந்தோறும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் திட்டங்கள் மீது, விவாதங்கள் நடத்த எதிர்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட முடியும் என கேள்வி எழுப்பினார்.

திருவள்ளூரில் போராட்டம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் பீம்ராவ் எம்எல்ஏ, இருகட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.எஸ்.கண்ணன், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். ஆந்திர, தமிழக எல்லை பகுதிகளில் உள்ள ஆறு,ஏரி, கடல் எல்லையை வரை யறை செய்ய வேண்டும்.

மலைவாழ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்தாமதமின்றி வழங்க வேண்டும். ஆரணி, கொசஸ்தலை, கூவம்ஆகிய நதிகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக் கைகளும் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x