Published : 25 May 2019 10:17 AM
Last Updated : 25 May 2019 10:17 AM

நெல்லை மக்களவை தொகுதியில் அப்போது தந்தைக்கு வெற்றி; இப்போது தனயனுக்கு தோல்வி

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் கடந்த 20 ஆண்டு களுக்குமுன் போட்டியிட்ட பி.எச்.பாண்டியனுக்கு வெற்றியை வாக் காளர்கள் பரிசாக அளித்தனர். ஆனால் இந்த தேர்தலில் அவரது மகன் பால் மனோஜ் பாண்டியன் தோல்வியை சந்தித்துள்ளார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பின் திமுகவுக்கும், அதிமுகவுக் கும் இடையேயான நேரடிப் போட் டியில் திமுக வெற்றி பெற்றுள்ளது, அதிமுக கோட்டைவிட்டுள்ளது. கடந்த 2014 தேர்தலைவிட இரு மடங்கு அதிகமாக திமுக வாக்கு களை பெற்றுள்ளது.

இத்தொகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கும் திமுக வுக்கும் நேரடி போட்டி இருந்தது. அப்போது அதிமுக வேட்பாளராக பி.எச். பாண்டியனும், திமுக வேட் பாளராக கீதாஜீவனும் போட்டி யிட்டனர். பிஎச் பாண்டியன் வெற்றி பெற்றார்.

20 ஆண்டுகளுக்குப்பின் தற் போது நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக பி.எச். பாண்டிய னின் மகன் பால் மனோஜ்பாண் டியன் போட்டியிட்டார். ஆனால், தந்தைக்கு வெற்றியை பரிசாக அளித்த திருநெல்வேலி தொகுதி தனயனுக்கு தோல்வியை அளித்துள்ளது. அவர் 3,37,166 வாக்குகள் பெற்றுள்ளார்.

கடந்த 2014 தேர்தலில் இத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி. பிர பாகரன் 3,98,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதை விட குறைவாகவே இந்த தேர் தலில் மனோஜ் பாண்டியன் வாக்கு களை பெற்றுள்ளார். அதேநேரத் தில் திமுக வேட்பாளர் ஞானதிரவி யம் 5,22,623 வாக்குகள் பெற்றுள் ளார். அதிமுகவை விட 1,85,457 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வெற்றிக்கொடியை நாட்டி யிருக்கிறது. கடந்த 2014 தேர்த லில் திமுக வேட்பாளராக போட்டி யிட்ட சி. தேவதாசசுந்தரம் 2,72,040 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பெற்றிருந்தார். அதிலிருந்து இரு மடங்கு அதிகமாக 5,22,623 வாக்கு களை தற்போது திமுக வேட்பாளர் ஞானதிரவியம் பெற்றிருக்கிறார்.

இத் தொகுதியில் அமமுக வேட் பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் 62,209 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்துள்ளார். இவர் கடந்த 2009 மக்களவை தேர்தலில் இதே தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டி யிட்டபோது 94,562 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தி ருந்தார். இப்போது அதைவிட மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x