Published : 28 May 2019 03:25 PM
Last Updated : 28 May 2019 03:25 PM

கட்சிக்குள் ராகுல் சந்திக்கும் சவால் என்ன?- ரஜினி கணிப்பு

ராகுல் காந்தியின் முன்னுள்ள சவால் தெரியும். அவர் பதவியில் நீடிக்கவேண்டும் எதிர்க்கட்சி தலைவராக அவர் செயல்படவேண்டும் தனது வல்லமையை நிரூபிக்கவேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

மும்பை புறப்படும் முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம்  பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அனைத்திற்கும் நிதானமாக தெளிவாக பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்த கேள்விக்கு அவர் விரிவான பதில் அளித்தார். ராகுல் சந்திக்கும் சவால், எதிர்க்கொள்ளும் பிரச்சினை குறித்து பதிலளித்தார்.

செய்தியாளர்கள் கேள்வியும் பதிலும்:

காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி தலைமை என்று நினைக்கிறீர்களா?

ராகுல் காந்திக்கு தலைமை பொறுப்பில்லை என்று சொல்லிவிட முடியாது. காங்கிரஸ் கட்சியை நிர்வாகிப்பது மிகவும் கடினம். பழம்பெரும் கட்சி என்பதால் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு இளம் தலைவராக பழம்பெரும் தலைவர்களை சமாளிப்பது கடினம். காங்கிரஸில் உள்ள பழம்பெரும் தலைவர்கள் யாரும் சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும், கடுமையாக உழைக்கவும் இல்லை. இதுவே என் கணிப்பு.

ராகுல் காந்திக்கு உங்கள் ஆலோசனையாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகக் கூடாது. அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். ஆளும்கட்சி எவ்வளவு முக்கியமோ, அதைப் போல எதிர்க்கட்சியும் மிகவும் முக்கியம். ஆகவே, காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியாக தங்களுடைய வல்லமயை நிரூபிக்க வேண்டும்.

மோடி பதவி ஏற்புவிழாவிற்கு செல்வீர்களா?

ஆமாம், மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்லவுள்ளேன்.  

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x