Published : 12 Sep 2014 10:22 AM
Last Updated : 12 Sep 2014 10:22 AM

பள்ளிக்குள் புகுந்து மாணவிகளுக்கு கத்திக்குத்து: முகமூடி அணிந்த 2 இளைஞர்கள் அட்டகாசம்

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அடுத்த பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத் துக்குள் புகுந்து மாணவியரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய முகமூடி அணிந்த 2 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருமலையப்பபுரத்தைச் சேர்ந்த முகமது ஜெய்லுதீன் ஆசாத், பொட்டல்புதூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, கணேசன், சுடலைமாரி, தங்கமாரி ஆகியோர் புதன்கிழமை பொட்டல் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 மாணவிகளைக் கத்தி யைக் காட்டி மிரட்டியுள்ளனர். தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகை யிட்டு ‘மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸாரின் பேச்சில் நம்பிக்கைக் கொண்டு பெற்றோர் முற்றுகையை கைவிட்டனர். இந் நிலையில் மாணவியரை மிரட்டிய 5 பேரில் முகமது ஜெய்லுதீன் ஆசாத் மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய இருவரை போலீஸார் விரைந்து கைது செய்தனர்.

முகமூடி இளைஞர்கள்

வியாழக்கிழமை காலை பொட்டல் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் முகமூடி அணிந்த 2 இளைஞர்கள் புகுந்து, அங்கு நின்ற 2 மாணவியர்களை கை, கால்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில், மாணவியருக்கு லேசான கீறல் காயங்கள் ஏற் பட்டது. காயம் அடைந்த மாணவி களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், அவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தகவல் அறிந்த மாணவியரின் பெற்றோர் மற்றும் பொட்டல்புதூர் பகுதி மக்கள் பள்ளியின் முன்னால் திரண்டு கடையம் - பொட்டல்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைமறைவு இளைஞர்கள்

தகவல் அறிந்த டிஎஸ்பி மணி மாறன் தலைமையிலான போலீ ஸார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் 1 மணிநேரம் நீடித்த மறியல் கைவிடப்பட்டது.

போலீஸ் விசாரணையில், புதன் கிழமை மாணவியரை மிரட்டிய தாக கைதான முகமது ஜெய்லு தீன் ஆசாத், கிருஷ்ணசாமி ஆகி யோருடன் போலீஸாரால் தேடப் பட்டுவரும் 3 பேரில் இருவர்தான் முகமூடி அணிந்து மாணவியரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது தெரிந்தது. தலைமறை வான இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

பிரச்சினைக்கு காரணம் என்ன?

அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவியரை ஒரு கும்பல் கடந்த பல மாதங்களாக கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர். மாணவியரை செல்போனில் படம் எடுத்து மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது என்று பல்வேறு சேட்டைகளில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாணவியர் பள்ளியில் தெரிவித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது. நிலைமை எல்லைமீறி போனதை அடுத்து பெற்றோரிடம் மாணவி கள் விவரத்தை தெரிவித் துள்ளனர்.

தகவல் அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட பிறகுதான் இந்த விவகாரம் பொதுமக்களுக்கு வெளியே தெரியவந்துள்ளது.

அரசுப் பள்ளி வளாகத்திலும், வெளியிலும் மாணவியரை குறிவைத்து சமூகவிரோத செயல் களில் ஈடுபடுவோர் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறையும், காவல் துறையும் முன்வர வேண்டும் என்பதே பொட்டல்புதூர் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x