Published : 16 Apr 2019 12:00 AM
Last Updated : 16 Apr 2019 12:00 AM

பிரச்சாரக் களத்துக்கு வராமல் ராமநாதபுரத்தில் காணாமல் போன சுயேச்சைகள்

ராமநாதபுரம் மக்களவைத் தேர் தலில் போட்டியிட ஆர்வத்தோடு மனுத்தாக்கல் செய்த சுயேச்சைகள் பலர், அதோடு கடமையை முடித் துக் கொண்டு பிரச்சாரக் களத்தில் இறங்காமல் ஒதுங்கிக் கொண்டனர். மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவது வழக்கம். அரசியல் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சிலர், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் உண்டு. தனிப்பட்ட செல்வாக்கிலும் சுயேச்சைகள் வென்றுள்ளனர்.

1952-ம் ஆண்டு முதல் இதுவரை யிலும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் நடைபெற்றுள்ள தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும், பார்வர்டு பிளாக் 1 முறையும் வெற்றி பெற்றிருந்தாலும் 1967-ம் ஆண்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட எஸ். எம். முகம்மது ஷெரீப் என்பவர் வெற்றி பெற்றார்.

15.7.1924-ல் பிறந்த எஸ்.எம். முகம்மது ஷெரீப் மதுரையில் கரீம்ஷா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், பிஹார் ராஞ்சி கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1964-ல் மதுரை நகராட்சி முனிசிபல் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற முகம்மது ஷெரீப், 1971-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு மக்க ளவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்டார்.

தற்போதைய தேர் தலில் ராமநாதபுரத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 7 பேரும், சுயேச்சைகள் 16 பேர் என மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாக்கு சேகரிப் பதைக் காண முடிந்தது. சிலர் பெயர ளவில் துண்டுப்பிரசுரம் அச்சிட்டு, தாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் மட்டும் போட்டுச் சென்றனர்.

 மற்றபடி சுயேச்சைகளைப் பார்க்க முடியவில்லை. பெருமைக்காக தேர்தலில் போட்டியிட்ட நிலை மாறி, தற்போது பணத்துக்கு விலை போகும் சுயேச்சைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர். முன்பெல்லாம் சுயேச்சைகளின் பிரச்சாரத்துக்கு ஆட்டோக்களே பிரதான வாகனம். அதில் ஒலி பெருக்கிகளை கட்டிக் கொண்டு பெரிய கட்சிகளுக்கு இணையாக வீதி, வீதியாகப் பிரச்சாரம் செய்வார்கள்.

தற்போது அது போல அவர்களைக் காண முடிவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், வாக்குச் சாவடிக்குள்ளும் வாக்கு எண்ணும் மையத்திலும் தங்களது பிரதிநிதிகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக, தாங்களே பெயருக்குச் சிலரை சுயேச்சைகளாக களமிறக்குவது உண்டு.

சில சுயேச்சைகள், வேட்புமனுத் தாக்கல் செய்த பின், பிரபலமான கட்சி வேட்பாளரிடம் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு களத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x